குஜராத் வெற்றி: பிரதமர் மோடிக்கு தங்கத்தில் சிலை!

டிரெண்டிங்

குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவின் வெற்றியை நினைவுபடுத்தும் விதமாக 156 கிராம் எடையில் பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையை சூரத்தைச் சேர்ந்த நகை வியாபாரி வடிவமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 182 இடங்களில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் , பாஜகவின்வெற்றியை நினைவுகூறும் வகையில் குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த நகை கடைக்காரர் ஒருவர், 18 கேரட் தங்கத்தில் 156 கிராம் எடையுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு சிலையை செய்துள்ளார்.

ராதிகா செயின்ஸ் நகை தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் பசந்த் போஹ்ரா தான் இந்த சிலையை செய்துள்ளார்.

இந்த சிலைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் இந்த தங்க சிலையை வாங்க ஆர்வமாக உள்ளனர். ஆனால் சிலையை விற்க பசந்த் முடிவு செய்யவில்லை.

இதுகுறித்து பசந்த் போஹ்ரா பேசியதாவது : “நான் பிரதமர் மோடியின் தீவிர ரசிகன், அவருக்காக ஏதாவது செய்ய விரும்பினேன்.

கிட்டத்தட்ட 20 கலைஞர்களை வைத்து மூன்று மாதங்களாக இந்த மார்பளவு சிலையை உருவாக்கினோம்.

பலரும் இதை விலைக்கு கேட்கின்றனர். இது இப்போதைக்கு விற்பனைக்கு இல்லை. இந்த சிலையை செய்ய 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

டிசம்பரில் இந்த சிலை தயாராகிவிட்டாலும், அதன் எடை 156 கிராமுக்கு சற்று அதிகமாக இருந்தது.

பாஜக 156 இடங்களைப் பெற்றுள்ளது என்பதை அறிந்த கலைஞர்கள் எடையைக் குறைக்க சில மாற்றங்களைச் செய்தனர். தற்போது இது பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

விஜய் ஆண்டனி உடல்நலம் குறித்து வதந்திகளை நம்ப வேண்டாம்: சுசீந்திரன்

2023 ஐபிஎல்: ரிஷப் பண்ட் பங்கேற்க வேண்டும் – ரிக்கி பாண்டிங்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *