நித்தியானந்தா ஆசிரமத்தில் இளம்பெண்கள் : உயர்நீதிமன்றம் உத்தரவு!

டிரெண்டிங்

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறைவைக்கப்பட்டுள்ள தனது இரு மகள்களை அவர்களது தந்தை மீட்கக்கோரிய வழக்கில் உள்துறை அமைச்சகம் பதிலளிக்க வேண்டும் என்று குஜராத் உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 13) உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்த தம்பதியர் ஜனார்த்தன சர்மா மற்றும் உமேஷ்வரி. இவர் தனது 4 மகள்களையும் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரில் சாமியார் நித்தியானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்தார். அங்கு குழந்தைகள் நால்வரும் தங்கி கல்வி பயின்று வந்தனர்.

இந்நிலையில் 2019ம் ஆண்டு ஜனார்த்தன சர்மாவின் 4 மகள்களையும் பெங்களூரில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் ஹிராபூரில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்துக்கு மாற்றி உள்ளனர்.

இதையறிந்த ஜனார்த்தன சர்மா தன்னுடைய மகள்களை பார்க்க அகமதாபாத் சென்றார். அப்போது ஆசிரம நிர்வாகிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

பின்னர் குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு மற்றும்
போலீசார் உதவியுடன் சென்ற ஜனார்த்தனா சர்மா ஆசிரமத்தில் இருந்த 2 மகள்களை மீட்டார்.

ஆனால் அவர்களது மூத்த மகள் லோபமுத்ரா (21), மற்றொரு மகள் நந்திதா (18) ஆகியோர் பெற்றோருடன் வர மறுத்துவிட்டனர்.

இதையடுத்து தனது மகள்களை மீட்டுத் தருமாறு ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் ஆசிரமத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள தனது மகள்களை மீட்டு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்துவதுடன், அவர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறியிருந்தார்.

மேலும் ஜனார்த்தன சர்மா அளித்த புகாரின் பேரில் விவேகானந்தா நகர் போலீசார், நித்தியானந்தா மற்றும் அவரது ஆசிரம நிர்வாகிகள் மீது கடத்தல், குழந்தைகளை சட்ட விரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

gujarat highcourt seek mha

எனினும் 2 இளம்பெண்களும் இதுவரை மீட்கபடவில்லை. இந்நிலையில் ஜனார்த்தன சர்மாவின் ஆட்கொணர்வு மனு வழக்கை,

நீதிபதி என்.வி.அன்ஜாரியா மற்றும் நீதிபதி நிரால் ஆர்.மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தது.

அப்போது, இந்த வழக்கில் பதில் அளிக்கும் வகையிலான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டிய நிலையிலும்,

மத்திய உள்துறை அமைச்சகம் உட்பட எவரும் பதில் அளிக்காதது குறித்து நீதிபதிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொகுக்கப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும், விசாரணை குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்து விரைவில் சமர்பிக்கும் என்றும் உறுதியளித்தார்.

இளம்பெண்கள் இருவரும் நாட்டிற்கு வெளியே இருப்பதாகவும், மத அதிகாரத்தை சிலர் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் ஜனார்த்தன சர்மா தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைக் கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் வழக்கினை வரும் பிப்ரவரி 6ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

கிறிஸ்டோபர் ஜெமா

டிஜிட்டல் திண்ணை:  முர்முவிடம் முதல்வர் ஸ்டாலின்… அமித் ஷாவிடம் ஆளுநர் ரவி: அடுத்து என்ன?

ஆவின் கூல்டிரிங்ஸ் : அமைச்சர் நாசர் கொடுத்த அப்டேட்!

+1
0
+1
1
+1
1
+1
3
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *