திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் தங்களது ஆதார் அட்டையைக் காண்பித்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்ட நிகழ்வு வைரலாகி வருகிறது.
சமீபத்திய காலங்களில் திருமணங்கள் பல சுவாரசியமான ஏற்பாடுகளுடன் நடைபெறுகின்றன.
ஏனென்றால் திருமண விழாவானது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்க வேண்டும் என்று மணமக்கள் விரும்புகின்றனர்.
இதனால் ஆடல், பாடல்,புகைப்படங்கள், என அனைத்தையும் கவனமாக ஏற்பாடு செய்கிறார்கள். இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு திருமண நிகழ்வில் வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் செப்டம்பர் 21 அன்று நடைபெற்ற ஒரு திருமணத்திற்கு வருகை தந்த விருந்தினர்கள் தங்களது ஆதார் அட்டையைக் காண்பித்த பிறகே திருமண அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இது தொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இந்த செய்தியினை ’இந்தியா டுடே’ தனது இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
அம்ரோஹாவின் ஹசன்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திருமண விழா நடைபெறும் இடத்திற்கு வந்திருந்த விருந்தினரைப் பார்த்து மணமகள் தரப்பு சற்று கவலையடைந்தது.
காரணம் அந்நேரத்தில் ஒரே இடத்தில் இரண்டு திருமண ஊர்வலங்கள் நடைபெற்றுள்ளன.
1 மணிக்கு உணவு பரிமாறத் தொடங்கியதும், மற்ற ஊர்வலத்தின் விருந்தினர்களும் உள்ளே நுழைந்துள்ளனர். இதனால் உணவு பரிமாறுவதை மணமகள் தரப்பு நிறுத்த முடிவெடுத்துள்ளனர்.
மேலும், கூட்டத்தைச் சமாளிக்க மணமகள் வீட்டார் மணமகன் தரப்பு விருந்தினர்களின் ஆதார் அட்டையைக் காட்ட வேண்டும் என்ற நிபந்தனையை முன் வைத்தனர்.
ஆனால் இதனால் திருமண விழாவிற்கு வந்திருந்த உண்மையான விருந்தினர்கள் ஆதார் அட்டை இல்லாததால் திருமண அரங்கிற்குள் நுழைய முடியாமல் போனது.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. பலர் இந்த நிகழ்வினை விருந்தினர்களை அவமதிக்கும் விதமாக கருதுகின்றனர்.
மோனிஷா
கடைசி டி20 போட்டியில் செய்யப்பட்ட மாற்றம்!
தீபாவளிக்கு பெட்ரோல் பாமா? அப்டேட் குமாரு