பஞ்சாபியர்களுக்குப் பிடித்தமான சிறப்பு காலை உணவு இந்த பட்டாணி பக்வான். மழை மற்றும் குளிர்காலத்துக்கேற்ற இந்த சத்தான உணவை நீங்களும் செய்து ருசிக்கலாம்.
என்ன தேவை?
காய்ந்த பட்டாணி – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
பீன்ஸ் – 4 (பொடியாக நறுக்கவும்)
உருளை சிறியது – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
முட்டைகோஸ் (துருவியது) – 2 டேபிள்ஸ்பூன்
புளி – முழுநெல்லி அளவு
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கொத்தமல்லித்தழை – அலங்கரிக்க சிறிதளவு
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
சாட் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
புளியை ஒன்றரை கப் தண்ணீரில் கரைத்து வைத்துக்கொள்ளவும். பட்டாணியை 8 மணி நேரம் ஊறவைத்து, பிறகு, தண்ணீரை வடித்து, அதனுடன் நறுக்கிய பீன்ஸ், உருளை, முட்டைகோஸ், உப்பு, மஞ்சள்தூள், புளிக்கரைசல் சேர்த்து குக்கரில் 3 விசில் வரும்வரை வேகவைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், நறுக்கிய இஞ்சி சேர்த்துத் தாளித்து, இதை வேகவைத்த பட்டாணி கலவையில் சேர்க்கவும். பிறகு, சாட் மசாலாத்தூள், கொத்தமல்லித்தழை தூவி அலங்கரித்து சூடாக பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: வீக் எண்டில் விருந்து… அடுத்த நாள் பட்டினி… இந்தப் பழக்கம் சரியா?