‘ரஞ்சிதமே’ : பாட்டியின் வைரல் வீடியோ!

Published On:

| By Kavi

வாரிசு படத்தில் இடம் பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலுக்கு திரையரங்கு ஒன்றில் பாட்டி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா ஆகியோரது நடிப்பில்  கடந்த 11ஆம் தேதி திரைக்கு வந்த படம் வாரிசு. இந்த படம் வெளியான அன்று அஜித்குமார் நடிப்பில் தயாரான துணிவு படமும் வெளியானது.

வாரிசு படத்தை விட துணிவு படத்திற்கு தமிழகத்தில் அதிக திரையரங்குகள் கிடைத்தது. அதைகாட்டிலும் குறைவான திரைகளில் வெளியான வாரிசு படம் தமிழ்நாட்டில் 63 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

உலகம் முழுவதும் ரூ.150கோடி ரூபாய்  வசூல் செய்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் அதிகாரபூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை காலம் என்பதால்  துணிவு, வாரிசு இரண்டு படங்களும் திரையிட்டுள்ள நகர்புறங்களில் உள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

விடுமுறைக்கு பின் இது போன்ற கூட்டம் வரும் என்பதற்கான உத்திரவாதம் இல்லை. துணிவு, வாரிசு இரண்டு படங்களுக்கும் நட்சத்திர அந்தஸ்து இருந்தாலும் படைப்பு ரீதியாக சிறந்த படம் இல்லை என்ற விமர்சனங்கள், பதிவுகள் குவிந்து வருகின்றன.

இந்த நிலையில் விடுமுறைக்குபின் திரையரங்குகளை நோக்கி குடும்பங்களை வரவைக்க வாரிசு, துணிவு படக்குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக வாரிசு படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் படம் பார்ப்பவர்களின் தனித்த ஆரவாரங்களை கண்டறிந்து அதனை சமூக வலைதளங்களில் பரப்பும் வேலைகளை செய்து வருகின்றனர்.

திரையரங்கில் வயதான பாட்டி ஒருவர் ரஞ்சிதமே பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர்.

https://twitter.com/i/status/1614493311900987392

பாட்டியுடன் சேர்ந்து கொண்டு சிறுசுகளும், இளைஞர்களும் டான்ஸ் ஆடும் காட்சியும் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

கோடிகளில் சம்பளம் வாங்கும் தமிழ் சினிமா முன்னணி திரைக்கலைஞர்கள் அவர்கள் நடிப்பில் வெளியாகும் படங்களை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் பங்கெடுக்காத சூழல் தொடர்ந்துவரும் நிலையில்,

கோடிகளை முதலீடு செய்து படத்தை தயாரித்துள்ள தயாரிப்பாளர்கள் இது போன்ற வேலைகளை செய்ய வேண்டிய சூழலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இராமானுஜம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்த உதயநிதி

கதறி அழும் அமேசான் ஊழியர்கள்: காரணம் இது தான்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share