மனைவி, குழந்தைகள் நியாபகம் வருவதால், பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்று டிக் டாக் புகழ் ஜி.பி.முத்து சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
20 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. கடந்த வாரம் புதிய போட்டியாளராக மைனா பிக்பாஸ் வீட்டிற்குள் களமிறங்கினார்.
முதல் வாரத்திலேயே சண்டை காட்சிகள் பிக்பாஸ் வீட்டிற்குள் சூடுபிடிக்க, ரசிகர்கள் ஆவலுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டுகளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் கவனம் ஈர்க்கக்கூடிய ஒரு நபராக டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளார். கமல்ஹாசனையே முதல் நாளில், “ஆதாமா” என்று கேட்டு அலறவிட்டார் ஜி.பி.முத்து.
ஜி.பி.முத்துவிற்கு இதனால் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உருவானார்கள். அவருக்கென்று தனி ஆர்மி ஆரம்பித்து விட்டார்கள்.
ஜி.பி.முத்துவும் பிக் பாஸ் வீட்டில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனால் அவர் முதல் வார பிக் பாஸ் வீட்டு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் அலப்பறை செய்து வந்த ஜி..பி முத்து, கடந்த இரண்டு நாட்களாக சோகத்தில் ஆழ்ந்துள்ளார். ஜி.பி முத்துவிற்கு வீட்டு நியாபகம் வந்ததால், தனது குழந்தைகள் மற்றும் மனைவியை பார்க்க வேண்டும் என்று அழுதார்.
இதனால் பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள், ஜி.பி.முத்துவை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள் ஜி.பி.முத்துவை சிரிக்க வைக்க முயற்சி செய்தும், ஜி.பி முத்து தனது அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் திணறி வருகிறார்.
பிக் பாஸ், ஜி.பி.முத்துவை அழைத்து சமாதானப்படுத்தினார். ஆனால் ஜி.பி.முத்து சமாதானமாகவில்லை, நான் இந்த வாரமே வீட்டிற்கு சென்று விடுவேன் என ஜி.பி.முத்து அழுகிறார்.
ஜிபி முத்து வீட்டிற்கு செல்ல போகிறேன் என்று சொல்வதால், பிக் பாஸ் வீடே இப்போது குழம்பி போய் உள்ளது.
பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களை விட ஜி.பி முத்துவிற்கு ரசிகர்கள் அதிகம். அதனால் ஜி.பி.முத்துவை பிக் பாஸ் வீட்டில் இருக்க வைப்பதற்கு பிக் பாஸ் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
செல்வம்
அண்ணா குறித்து சர்சை பேச்சு : பத்ரி சேஷாத்ரி பதவி பறிப்பு!
நடிகை பார்வதி நாயர் வீட்டில் திருட்டு!