Google will delete millions of Gmail accounts

ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்யும் கூகுள்… நீங்க செய்ய வேண்டியது இதுதான்! 

டிரெண்டிங்

வரும் டிசம்பர் (2023) மாதம் லட்சக்கணக்கான ஜிமெயில் (Gmail) அக்கவுண்டுகளை டெலிட் செய்யப்போவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. Google will delete millions of Gmail accounts

காலையில் கண் விழிப்பதில் இருந்து இரவு தூங்க செல்லும் வரை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் அம்சமாக கூகுள் சேவைகள் இருக்கின்றன.

குறிப்பாக ஜிமெயில், காலண்டர், மீட்(Meet), புகைப்படங்கள், மேப் என அனைத்துக்கும் நாம் கூகுள் சார்ந்தே இருக்கிறோம். இதனால் இணைய உலகின் ராஜா பகவூத் ஆக கூகுள் திகழ்கிறது.

இந்த நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஜிமெயில் அக்கவுண்டுகளை டெலிட் செய்ய இருப்பதாக கூகுள் அறிவித்திருக்கிறது.

இதற்கு காரணமாக கூகுள் முன் வைப்பது பாதுகாப்பு அம்சத்தை தான். இதுகுறித்து கூகுள் துணை தலைவர் ரூத் கிரிசெலி, ‘2 வருடங்களுக்கும் மேல் செயல்படாமல் இருக்கும் தனிநபர்களின் ஜிமெயில் அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்படும் அபாயங்கள் இருக்கின்றன.

அதில் டூ பேக்டர் அதென்டிகேஷன் (two factor authentication) உள்ளிட்ட எந்தவொரு பாதுகாப்பு அம்சமும் இருக்காது.

அப்படி முறைப்படுத்தப்படாமல் இருக்கும் ஜிமெயில் அக்கவுண்டுகளை முறைப்படுத்தவே இந்த நடவடிக்கையை நாங்கள் எடுக்க இருக்கிறோம்.

இதில் தனிநபர்களின் ஜிமெயில் அக்கவுண்டுகள் மட்டுமே டெலிட் செய்யப்படும். நிறுவனங்களின் அக்கவுண்டுகள் டெலிட் செய்யப்பட மாட்டாது’ என கடந்த மே மாதமே தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுடைய ஜிமெயில் கணக்கு டெலிட் செய்யப்படாமல் இருக்க வேண்டுமெனில் நீங்கள் முதலில் அதை லாகின் செய்ய வேண்டும். இதனால் அந்த அக்கவுண்ட் ஆக்டிவ் ஆக மாறிவிடும்.

மேலும் உங்கள் அக்கவுண்டில் இருந்து மெயில் அனுப்புவது, கூகுள் ஹார்ட் டிரைவ் பயன்படுத்துவது, கூகுள் பிளே ஸ்டோரில் ஏதாவது செயலி பயன்படுத்துவது, கூகுளை தகவல்கள் தேட (Search) பயன்படுத்துவது போன்றவற்றில் ஏதாவது ஒரு விஷயத்தை நீங்கள் செய்தாலும் கூகுள் கணக்குகள் டெலிட் ஆகாமல் பார்த்து கொள்ளலாம்.

இதுதவிர அந்த குறிப்பிட்ட கணக்கில் இருந்து யூடியூப்பில் வீடியோ பார்த்தாலும் உங்கள் அக்கவுண்டை காப்பாற்றி கொள்ளலாம். மேலும் உங்கள் கூகுள் கணக்கில் கூகுள் ஒன் அல்லது ஏதாவது ஒரு கூகுள் சப்ஸ்கிரிப்ஷன் நீங்கள் வைத்திருந்தாலும் உங்கள் கணக்கு டெலிட் ஆகாது என தெரிவித்துள்ளது. Google will delete millions of Gmail accounts

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்… 

-மஞ்சுளா 

விமர்சனம் : ஜப்பான்!

நெருப்போடு விளையாடாதீர்கள் : ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு மனு: உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ்!

எதிர்க்கட்சி துணை தலைவர் பதவி : சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவு!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *