Google Pixel 8a: மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்ற கூகுள் பிக்சல் 6A, பிக்சல் 7A ஸ்மார்ட்போன் வரிசையில், கூகுள் நிறுவனம் தனது புதிய பிக்சல் 8A ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. வரும் மே 14 அன்று நடைபெறவிருக்கும் ‘கூகுள் I/O’ நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த நிகழ்வுக்கு ஒரு வாரம் முன்னரே ‘கூகுள் பிக்சல் 8A’ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
கூகுள் பிக்சல் 8A விலை என்ன?
இந்த ஸ்மார்ட்போன் 2 வகைகளில் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. அதில் 8GB ரேம் + 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.52,999 என்ற விலைக்கும், 8GB ரேம் + 256GB சேமிப்பு கொண்ட வகை ரூ.59,999 என்ற விலைக்கும் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த கூகுள் பிக்சல் 8A பச்சை (Aloe), நீலம் (Bay), வெள்ளை (Porcelain) மற்றும் கருப்பு (Obsidian) என 4 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு பிளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், அதன் விற்பனை மே 14 காலை 6:30 மணிக்கு துவங்கவுள்ளது.
கூகுள் பிக்சல் 8A சிறப்பம்சங்கள் என்ன?
கூகுள் பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ போன்றே காட்சியளிக்கும் இந்த பிக்சல் 8A, 6.1-இன்ச் சூப்பர் அக்டுவா திரையை கொண்டுள்ளது. மேலும், 120Hz திரை புதுப்பிப்பு விகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு உள்ளிட்ட திரை அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ‘டென்ஷர் G3’ பிராசஸரை கொண்டு இயங்குகிறது. இதில், சர்க்கிள் டு சர்ச், ஏஐ இமேஜ் எடிட்டிங், ஆடியோ மேஜிக் ஏரேசர், பெஸ்ட் டேக் போன்ற பல சுவாரஸ்ய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
கேமராவை பொறுத்தவரை, 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 13 மெகாபிக்சல் 2ஆம் கேமரா என 2 பின்புற கேமராக்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. வைட் ஆங்கிள், அல்ட்ரா-வைட் ஆங்கிள், 8x சூப்பர் ஜூம் உள்ளிட்ட அம்சங்களை, இந்த கேமராக்கள் கொண்டுள்ளது. மேலும், முன்புறத்தில் 13 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா இடம்பெற்றுள்ளது.
4,492mAh அளவிலான பேட்டரியுடன் களமிறங்கியுள்ள கூகுள் பிக்சல் 8A ஸ்மார்ட்போன், 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது.
மேலும், வை-பை 6, ப்ளூடூத் 5.3, USB டைப்-C போர்ட் உள்ளிட்ட அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.
ஒரு பிசிக்கல் சிம், ஒரு இ-சிம் என 2 சிம்களை இந்த ஸ்மார்போனில் பொருத்திக்கொள்ளலாம்.
முந்தைய ஸ்மார்ட்போன்கள் போன்றே, இந்த ஸ்மார்ட்போனும் இன்-டிஸ்பிளே பிங்கர்பிரின்ட் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
”நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் முன் இதை செய்யுங்கள்” : சாய்னா நேவாலுக்கு அமைச்சர் பதில்!
சாதித்து காட்டிய சின்னதுரை… பாராட்டிய பா. ரஞ்சித்