100 பில்லியன் டாலரை இழந்த கூகுள்: செய்த தவறு என்ன?

டிரெண்டிங்

கூகுள் நிறுவனத்தின் செயலி செய்த தவறால் அந்த நிறுவனம் சுமார் 100 பில்லியன் டாலர்களை இழந்துள்ளது.

Chat GPT-யின் செயற்கை நுண்ணறிவு திறனை Bing சர்ச் இன்ஜினுடன் இணைத்து புதிய சர்ச் சேவையின் டேமோவை மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அதேநேரம், Chat GPT சேவையை உருவாக்கிய Open AI நிறுவனத்தில் அதிகளவில் முதலீடும் செய்து வருகிறது மைக்ரோசாப்ட்.

இந்நிலையில், மைக்ரோசாஃப்ட்டின் டெமோவுக்கு அடுத்த நாளே ‘Bard’ எனப் பெயரிடப்பட்டிருக்கும் அதன் சொந்த AI சாட்-பாட்டை அறிமுகப்படுத்தியது கூகுள் நிறுவனம் . Chat GPT போன்றே நாம் கேட்கும் கேள்விகளுக்கு இதுவரை அது இணையத்திலிருந்து சேகரித்த தகவல்கள் அனைத்தையும் கொண்டு பதிலளிக்கும்.

இதுகுறித்து கூகுள் ட்விட்டரில் GIF ஒன்றைப் பதிவிட்டிருந்தது. அதில் Bard-யிடம் ‘என் ஒன்பது வயது மகனிடம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் எந்தப் புதிய கண்டுபிடிப்புகள் பற்றிச் சொல்லலாம்’ எனக் கேள்வி எழுப்பப்பட்டிருக்கும்.

அதற்கு சில கண்டுபிடிப்புகளைப் பட்டியலிட்டிருக்கும் Bard. அதில் கடைசியாக நம் சூரியகுடும்பத்திற்கு வெளியே இருக்கும் ஒரு கோளின் முதல் புகைப்படத்தை எடுத்தது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிதான் எனக் குறிப்பிட்டிருந்தது Bard.

ஆனால், கூகுளின் Bard செயலி குறிப்பிட்ட இந்த செய்தி தவறானது என ஆய்வாளர்கள் விளக்கமளிக்க அது உலகமுழுவதும் சமூக வலைதளங்களில் வைரலானது. உண்மையில் 2004-லேயே சூரியகுடும்பத்திற்கு வெளியே இருக்கும் கோள்களின் படங்களை ஆய்வாளர்கள் படமெடுக்க தொடங்கிவிட்ட நிலையில், Bard செயலியின் இந்த கருத்தை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், ஆல்ஃபபெட்டின் பங்குகளின் மதிப்பும் கடுமையாக பாதித்தது. ஒரே நாளில் ஆல்ஃபபெட்டின் பங்குகள் சுமார் 8% குறைந்து அதன் சந்தை மதிப்பில் 100 பில்லியன் டாலரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்க கட்டிகள்: சிக்கியது எப்படி?

“பணம் உலகை காலி பண்ணிடும்” : பிச்சைக்காரன் 2 அப்டேட் வெளியீடு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *