உலக மகளிர் தினம்: கூகுள் வெளியிட்ட சிறப்பு டூடுல்!

Published On:

| By Selvam

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் அனிமேஷனுடன் கூகுள் இன்று டூடுல் வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் மார்ச் 8-ஆம் தேதி உலகம் முழுவதும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு இந்தியாவில் மகளிர் தினத்துடன் ஹோலி பண்டிகையும் கொண்டாடப்படுகிறது.

மகளிர் தினத்தில் பெண்கள் நமது சமூகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு நினைவுகூரப்படுகிறது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், பாலின பாகுபாடு போன்றவற்றை களைவதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இந்தநிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள், பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய வகையில் ஒருவர் பேசுகிறார், குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் அம்மாக்கள், போராட்டத்தில் ஈடுபடும் பெண்கள், முதியவர்களுக்கு சிகிச்சையளிக்கும் பெண் மருத்துவர் என அனைத்து பெண்களும் ஊதா நிறத்தில் அனிமேஷனில் இருப்பது போன்று டூடுல் உள்ளது. கூகுளின் இந்த டூடுல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கூகுள் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஒருவருக்கொருவர் ஆதரவாக வளர்ச்சியை நோக்கி செல்லும் பெண்களை இன்றும் நாளையும் தினமும் கொண்டாடுவோம்.” என்று தெரிவித்துள்ளது.

செல்வம்

“ஒன்றுக்கும் மேற்பட்ட வீட்டு மின் இணைப்புகளை ஒன்றிணைக்க ஆதார் எண் பெறப்பட்டதா?”: செந்தில் பாலாஜி விளக்கம்!

கிச்சன் கீர்த்தனா: நெத்திலிக் கருவாடு வறுவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel