சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று (பிப்ரவரி 9) மாற்றம் ஏதும் இல்லை. 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 46,640க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,830க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமின்றி சவரன் ரூ. 50,880க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 1 குறைந்து ரூ. 6,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியை பொறுத்தவரையில் இன்று ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 50 காசு உயர்ந்து ரூ. 77க்கும், ஒரு கிலோவுக்கு ரூபாய் 500 உயர்ந்து ரூ. 77,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், தங்கம் விலையில் மாற்றம் ஏற்படாதது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை தந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் சஸ்பெண்ட்!
சிஎஸ்கே அணியின் புதிய ஸ்பான்சர் ஆனது ஏன்? : எதிஹாட் அதிகாரி விளக்கம்!