முகூர்த்த நாளில் மீண்டும் இறங்கிய தங்கம் விலை!

Published On:

| By christopher

இந்த மாதத்தில் அடுத்தடுத்து முகூர்த்த தினங்கள் வரும் நிலையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறி இறங்கி வருகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்ரவரி 8) சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூ. 46,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூபாய் 10 குறைந்து ரூ. 5,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து 50,976க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமிற்கு ரூபாய் 10 குறைந்து ரூ. 6,372க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் விலை மாற்றமின்றி நேற்று போலவே ஒரு கிராம் ரூபாய் 76க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 76,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை நேற்று உயர்ந்த நிலையில், இன்று முகூர்த்த நாளில் விலை குறைந்துள்ளது நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

தமிழிசைக்கு எம்.பி சீட் கிடைக்குமா? நடக்கும் ஆடுபுலி ஆட்டம்!

எலக்‌ஷன் ஃபிளாஷ் : விஜயகாந்த் டிவியை வாங்கும் விஜய்! மத்திய அரசுப் பணிக்கு செல்லும் முக்கிய அதிகாரிகள்! அதானிக்கு விற்க மறுப்பு… இந்தியா சிமென்ட்ஸ் மீது ED ரெய்டு பின்னணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel