பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்யப்படும்.
அதனை தொடர்ந்து கோ பேக் ஹேஸ்டேக் பலருக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ட்விட்டரில் எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம்!
3 நாள் பயணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கோவைக்கு நேற்று புறப்பட்டு சென்றுள்ளார்.
கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய 3 மாவட்டங்களில் நடைபெற உள்ள பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார். இன்று காலை 10 மணிக்கு ஈச்சனாரி பகுதியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
தொடர்ந்து சூலூர் பேரூராட்சியில் மூலதன மானிய திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள, பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் குடியிருப்புக்கான பணிகளையும், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.2 கோடி ரூபாய் மதிப்பீட்டில், சூலூர் வாரச்சந்தை வளாகத்தை மேம்படுத்தும் திட்ட பணிகளையும் இன்று துவக்கிவைக்க உள்ளார்.
மாலை 5 மணிக்கு பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் நடைபெறும் திமுக கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். பின்னர் திருப்பூருக்கு செல்கிறார்.

கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்த அதிமுக கடந்த சட்டமன்றத் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்தது.
இந்நிலையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் கொங்கு மண்டலத்திற்கு அடிக்கடி சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
டிரெண்டிங்கில் கோ பேக் ஸ்டாலின்!
இந்தசூழலில் முதல்வரின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.
முன்னதாக கடந்த மே மாதம் அவர் கோவைக்கு சென்றபோது முதன்முறையாக #GoBackStalin ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யப்பட்டு டிவிட்டரில் தேசிய அளவில் முதலிடம் பிடித்தது.
அப்போது அதற்கு பதிலடியாக, #KovaiWelcomesStalin என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது.
கொங்கு மண்டலத்தில் தீவிரம் காட்டும் திமுகவின் முயற்சியை தடுக்க, அதிமுக மற்றும் பாஜக கட்சி தொண்டர்கள் இந்த வேலையில் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

பஞ்சாபில் பிரதமருக்கு எதிர்ப்பு!
டெல்லியில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்களுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று பஞ்சாப் செல்கிறார். விவசாயிகளை புறக்கணித்து வரும் மோடிக்கு எதிராக தற்போது #ModiGoBack என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
டிஜிட்டல் திண்ணை: செந்தில்பாலாஜிக்கு எதிராக மாவட்டப் பொறுப்பாளர்கள்! – ஸ்டாலின் கோவை விசிட் ஹாட்!