ஒரு டஜன் மாம்பழம் ரூ.7000-க்கு விற்பனை… அப்படி என்ன ஸ்பெஷல்?

டிரெண்டிங்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மாம்பழத்திற்கு மயங்காதவர்கள் என யாரும் கிடையாது. தித்திக்கும் சுவை கொண்ட  மாம்பழங்கள் பொதுவாக கோடை காலத்தில் தான் அதிகம் விற்பனைக்கு வரும்.

என்றாலும் குளிர்காலத்திலும் அபூர்வமாக சில மாம்பழ வகைகள் விற்பனைக்கு வருகின்றன. அந்த வகையில் கோவாவில் தற்போது ‘மன்குராட்’ என்ற மாம்பழம் விற்பனைக்கு வந்துள்ளது.

சீசன் இல்லாத நேரத்தில் மார்க்கெட்டிற்கு வந்துள்ள இந்த மாம்பழம் ஒரு டஜன் ரூபாய் 7௦௦௦ என விற்பனை செய்யப்படுகிறது.

வரத்து குறைவாக இருப்பதால் தற்போது அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், கோடை காலத்தில் வரத்து அதிகரிக்கும் போது விலை சீராகி விடும் எனவும், இதுகுறித்து கோவாவை சேர்ந்த மாம்பழ வியாபாரிகள் கருத்து தெரிவித்து இருக்கின்றனர்.

இந்தியாவில் பொதுவாக செந்தூரம், காளையபாடி, அல்போன்சா, மனோரஞ்சிதம், நாட்டுக்காய், மல்கோவா, காசா, ஊறுகா காய் (கிளி மூக்கு மாம்பழம்), பங்கனபள்ளி, நார் மாம்பழம் (நீலம் மாம்பழம்), கல்லா மாங்காய், ருமேனியா, இமாயத், பெனிஷான், பெட்டா ரசலு, தாஷேரி, கேசரி, தோதாபுரி, மல்லிகா, செருகு, பாம்பே பேடா, கஜூ, தில்பசந்த், ஆசம்-உஸ்-சமார் போன்ற மாம்பழ வகைகள் பிரபலமாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஐந்து பள்ளிகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல்: பதட்டத்தில் தமிழகம்!

ஒரு சீட் கேட்கும் மமக… திமுக பதில் என்ன?

+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0