பொதுவாக, தூக்கத்தில் ஏற்படும் மாரடைப்பு… 70-80 வயதை தாண்டியவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், மதுப் பழக்கம் உடையவர்கள், தூக்க மாத்திரை எடுத்துக்கொள்பவர்களுக்கு வரும்.
ஆனால், இப்போது 30-35 வயதுடையவர்களுக்கும் வருவதற்கு காரணம், அவர்களுடைய வாழ்க்கை முறைதான் என்கிறார்கள் இதயநல மருத்துவர்கள்
உதாரணத்துக்கு விடுமுறை நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு வரை நன்றாகச் சாப்பிட்டுவிட்டு தாமதமாக உறங்கச் செல்வார்கள். மறுநாளான திங்கட்கிழமை 6 மணிக்கு எழுந்து வேலைக்குச் செல்ல வேண்டுமே என்று பதற்றத்துடன் படுப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள்தான் அதிகாலை நேரத்தில் 5 மணியில் இருந்து 6 மணிக்குள்ளாக உறக்கத்திலேயே ஏற்படும் மாரடைப்பை அதிகம் சந்திக்கின்றனர்.
‘நான் எட்டு மணிக்கு மேல் எழுந்தால் ஒன்றும் ஆகாதே’ என்று நினைப்பவர்களும் உண்டு. மேலும் சிலர், ‘நான் இனி திங்கட்கிழமை எழுந்திருக்கவே மாட்டேன்’ என்றும் சொல்லலாம். அவர்களுக்கான பதில் இதுதான்…
‘நீங்கள் எழுந்து கொள்ளும் நேரம் முக்கியமல்ல; நாளும் கிழமையும் முக்கியமல்ல… எழுந்துகொள்ளும்போது இருக்கும் மனநிலைதான் முக்கியம்.
மன அமைதியுடன் மகிழ்ச்சியாகத் தூங்கச் செல்லுங்கள், உங்களின் இறப்பு தள்ளி வைக்கப்படும்’ என்கிறார்கள் இதயநல மருத்துவர்கள்.
இப்படிப்பட்ட இறப்பு ஏற்படாமல் இருக்கும் வழிமுறைகளையும் விளக்குகிறார்கள்..
“இப்போது பல நிறுவனங்களிலும் மெடிக்ளைம் பாலிசி என்னும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க வேண்டும் என்கிற நிலை வந்துவிட்டது.
அதைப் பயன்படுத்துங்கள், கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம், நீரிழிவு, இசிஜி, எக்ஸ்ரே உள்ளிட்ட பரிசோதனைகளை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளுங்கள். நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றைத் தொடர்ந்து கண்காணியுங்கள். பரிசோதனைகள் முடிவின்படி மருத்துவரின் ஆலோசனைப்படி உடல்நிலையை சரிசெய்து கொள்ளுங்கள்.
குறிப்பாக சாப்பிடும்போது அரை வயிறு சாப்பாடு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும். உறங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பே இரவு உணவை முடித்துவிட வேண்டும். சீரான உணவுப் பழக்கம், சீரான உடற்பயிற்சி, நேர்மறை எண்ணங்கள் உள்ளிட்ட மூன்றையும் எப்போதும் கடைப்பிடித்தால் தூக்கத்தில் வரும் மாரடைப்பு மட்டுமல்ல… எந்த நேரத்தில் மாரடைப்பு வருவதையும் தடுக்கலாம்” என்கிறார்கள் உறுதியாக.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பியூட்டி டிப்ஸ்: வெயில்படும் இடங்களில் கருமை… நீக்குவது எப்படி?
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்?
நல்ல காலம் பொறக்குது: அப்டேட் குமாரு
T20 World cup 2024: இந்தியாவிற்கு எப்போது போட்டிகள்? முழு அட்டவணை இதோ!