தனது ரசிகர் ஒருவரிடம், உணவிற்காக ஒருமுறையாவது பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு தோனி கூறும் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, தற்போது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வருகிறார்.
இதற்கிடையே பண்ணை விவசாயம், உலக நாடுகளுக்கு பயணம் என்று ஜாலி மோடில் வலம் வருகிறார். இதுதொடர்பான வீடியோக்கள் அவ்வபோது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகும்.
இந்த நிலையில், ரெஸ்டாரண்ட் ஒன்றில் தனது ரசிகரிடம், “நீங்கள் அந்த குறிப்பிட்ட உணவுக்காக ஒருமுறையாவது பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும்” என்று தோனி கூறியுள்ளார்.
https://twitter.com/taimoorze/status/1740665504610812382
எனினும் அதனை ஏற்க மறுத்த அந்த ரசிகர், “நீங்கள் நல்ல உணவை பரிந்துரைத்தாலும் நான் அங்கு செல்லமாட்டேன். எனக்கு உணவு பிடிக்கும், ஆனால் நான் அங்கு செல்ல மாட்டேன்” என்று தோனியிடம் கூறினார்.
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய அணிக்காக விளையாடும் போது, அங்குள்ள உள்ளூர் உணவு வகைகளை ருசிபார்த்த தோனி அதுகுறித்து ஏற்கெனவே பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
திருநெல்வேலி : அரையாண்டு தேர்வு தேதி வெளியானது!
டீ குடித்துக்கொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் 5 பேர் பரிதாப பலி!