லாரா என்ற பெண் ஒருவர் தனது தாயைப் பயப்பட வைப்பதற்காகச் செய்த பிராங்க் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நாம் பல விதமான வீடியோக்களை தினசரி பார்த்து வருகிறோம்.
அவற்றில் சில நம்மைச் சிரிக்கவைத்து மறக்க முடியாத வீடியோவாக மாறிவிடும்.
அப்படி ஒரு வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. லாரா என்ற பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
அதில் அவரது தாய் சோபாவில் அமர்ந்து கொண்டு மடிக்கணினியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அப்போது தரையில் ஒரு வாத்து பொம்மை இருக்கிறது. அந்த பொம்மை திடீரென்று லேசாக அசைகிறது.
இதனை லாராவின் தாய் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார். வாத்து பொம்மை நகர்ந்துகொண்டே அவரை நோக்கிச் செல்கிறது.
இதனை கண்ட லாராவின் தாய், அந்த அறையில் வேறு யாரும் இல்லாததால் சற்று பயத்தோடு அந்த வாத்து பொம்மையை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறார்.
எதிர்பாராத விதமாக அந்த வாத்து பொம்மை வேகமாக நகர்ந்து முன்னோக்கிச் செல்கின்றது.
இதனால் பயந்த அவர், சோபாவில் இருந்து சறுக்கியபடி கீழே விழுகிறார். இந்த வீடியோதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
இந்த வீடியோ இதுவரை 6 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் கருத்துக்களைப் பெற்றுள்ளது.
இந்த வீடியோவை பார்த்த பலரும், ”அவரது ஆன்மா அவர் உடலில் இருந்து பிரிந்திருக்கும்”, ”இது ஒரு நல்ல பிராங்க்”, ”இது நல்ல குறும்பு, நான் அந்த வாத்து நகர்வதைப் பார்த்தவுடன் அதனைக் கீழே தூக்கி எறிந்திருப்பேன்” என்று தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
மோனிஷா
இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார் மோடி
காந்தி பல்கலை: வெள்ளை தொப்பியில் மோடி, ஸ்டாலின்