சரியான பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்பியுமான ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்றுள்ளார்.
குமரி முதல் காஷ்மீர் வரையிலான அவரது பயணத்தில் வழிநெடுகிலும் ஏராளமானவர்கள் அவரை சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.
இளம் தலைமுறையினருக்கு மிகவும் பிடித்தவராகவே வலம் வருகிறார் ராகுல்காந்தி. அவரது திருமணம் பற்றி எப்போதுமே கேள்வி இருப்பதுண்டு.
இந்தநிலையில் ராகுல்காந்தி தனியார் டிஜிட்டல் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
அதில் பெண் நிருபர், திருமணம் செய்து கொள்ள திட்டம் உள்ளதா? என கேட்டபோது, சிரித்துக்கொண்டே நல்ல பெண் கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றார்.
உங்களிடம் எதேனும் பட்டியல் உள்ளதா? என மீண்டும் கேள்வி எழுப்பிய போது அப்படி ஏதும் இல்லை ஒரு அன்பான புத்திசாலியான பெண்ணாக இருந்தால் போதும் என ராகுல் கூறினார்.
அப்போது, இது பெண்களுக்கான செய்தி என நிருபர் கூற என்னை சிக்கலில் மாட்டி விடாதீர்கள் என ராகுல் சிரித்தபடி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கலை.ரா
“கை கொடுப்பதோடு, வாக்கும் சேகரிப்பார் கமல்”- இளங்கோவன் நம்பிக்கை!
மாநில மொழிகளில் தீர்ப்பு: ராமதாஸ் வரவேற்பு!