சாலையோர கடையில் டீ குடித்த ஜெர்மனி அதிபர்
2 நாள் பயணமாக இந்தியா வந்த ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கோல்ஸ் சாலையோர கடையில் டீ குடித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அரசு முறைப்பயணமாக ஜெர்மனி அதிபர் ஓலப் ஸ்கோல்ஸ் இந்தியா வந்தார். அவருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாடுகளிடையே பரஸ்பரம் ஒத்துழைப்பு, வர்த்தகம், உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த அரசு முறைப்பயணத்தின் போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. ஜெர்மனி அதிபர் ஓபல் ஸ்கோல்ஸ் டெல்லியின் சாணக்யாபுரி பகுதியின் சாலையோரத்தில் உள்ள டீ கடையில் தேநீர் குடித்துள்ளார்.
அந்த புகைப்படத்தை, இந்தியாவிற்கான ஜெர்மன் தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது, அதில், “சுவை மிகுந்த ஒரு கப் தேநீரை குடிக்காமல் இந்தியாவை நீங்கள் எப்படி அனுபவிக்க முடியும்?
ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கால்சை டெல்லியின் சாணக்யாபுரி பகுதியின் சாலையோரத்தில் உள்ள எங்களது விருப்பத்திற்குரிய தேநீர் கடை ஒன்றுக்கு அழைத்துச் சென்றோம்.
இந்தியாவின் உண்மையான சுவை. நீங்களும் செல்ல வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.
டீ குடித்து முடித்து விட்டு டீக்கடைக்காரருடன் சேர்ந்து அவர் புகைப்படமும் எடுத்து கொண்டார்.
இந்தியா வந்த ஜெர்மனி அதிபர் இந்தியாவின் சாலையோர கடையில் தேநீர் அருந்திய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
நாகாலாந்து மேகாலயா தேர்தல்: 1 மணி நிலவரம்!
1 மணி நிலவரம்: ஆண்களை காட்டிலும் பெண்கள் வாக்குகள் அதிகம்!