Galaxy Z Fold 4 and Flip 4: அறிமுகமாகும் சாம்சங் புதிய தயாரிப்புகள்!

டிரெண்டிங்

தென்கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் விழா இன்று (ஆகஸ்ட் 10 ) இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் (Galaxy Z Fold 4 and Flip 4) உட்பட ஸ்மார்ட் வாட்ச் (Galaxy Watch 5), and TWS earbuds (Galaxy Buds 2 Pro) என பல்வேறு சாதனங்கள் இந்தியாவில் சாம்சங் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நேரலை நிகழ்வை சாம்சங் நிறுவனத்தின் யூடியூப் பக்கத்தில் பார்க்கலாம்.

Galaxy Z Fold 4 and Flip 4 விலை நிலவரம் :

Z Fold 4 (256GB) – இந்திய மதிப்பில் ரூ.1,46,578 ஆகவும்
Z Fold 4 (512GB) – ரூ.1,54,691 வரை இருக்கவும் வாய்ப்புள்ளது.

Z Flip 4 (128GB) – ரூ.89,515 ஆகவும் (256GB) – ரூ.94,403 அல்லது அதற்கு மேல் நிர்ணயம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

Z Flip 4 (512GB) – ரூ.1,04,175 அல்லது அதற்கு மேல் இருக்கும்.

Galaxy Z Fold 4 and Flip 4 நிறம் :

Galaxy Z Fold கருப்பு, பழுப்பு, சாம்பல் பச்சை ஆகிய மூன்று நிறங்களில் வெளியாகவுள்ளது.

Flip 4 சாம்பல், பழுப்பு, ஊதா, மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வெளியாகவுள்ளது.

Samsung Galaxy Z Fold 4

alt="Galaxy Z Fold 4 Flip 4 features"

Samsung Galaxy Z Fold 4 ஆனது 6.2 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் 7.6 இன்ச் இன்டெர்னல் டிஸ்ப்ளே வசதியுடன் வெளிவரவுள்ளது.

அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 21.6:18 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் சிப்செட். மேலும் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் இயங்குதளம். 12ஜிபி/16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜி இன்டர்னல் ஸ்டோரேஜ்50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி மெயின் கேமரா + 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

4400 எம்ஏச் பேட்டரி மற்றும் இதை சார்ஜ் செய்ய 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த போன் 254 கிராம் எடை கொண்டிருக்கும்.

Galaxy Z Flip 4:

alt="Galaxy Z Fold 4 Flip 4 features"

6.7-இன்ச் பிரைமரி டிஸ்பிளே மற்றும் 2.1 இன்ச் கவர் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதியைக் கொண்டு வெளியாகவுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 3700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றிருக்கும். 15 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் இடம்பெற்றுள்ளது.

இந்த போன் 187 கிராம் எடை உள்ளதாக இருக்கும் என சாம்சங் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • க.சீனிவாசன்

விஜய்க்காக என்ன உணவு ஆர்டர் செய்வீர்கள்?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.