வயிற்றில் சில நேரங்களில் ஒருவித ‘கடமுடா’ சத்தம் வந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் இந்தச் சத்தம் வெளியில் கேட்கும் அளவுக்கு அதிகமாக இருக்கும். இதற்கான காரணம் என்ன? இதை சரியாக்க என்ன செய்வது? பொது மருத்துவர்கள் தரும் விளக்கம் என்ன?
“வயிற்றில் கேட்கும் இந்தச் சத்தம், ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும்போதோ, சும்மா இருக்கும்போதோ வயிற்றில் அசைவுகளும், கடமுடா என்ற சத்தமும் கேட்கும். சிலர் இதை அவர்கள் மட்டும் உணர்வார்கள். இன்னும் சிலருக்கு இது வெளியிலும் கேட்கும்.
மருத்துவரிடம் இந்தப் பிரச்சினையுடன் வரும்போது ஸ்டெதஸ்கோப் இல்லாமலேயே வெளியிலும் அந்தச் சத்தம் கேட்கும். குடலின் அசைவுகள் அதிகரிக்கும்போது (Increased Intestine Movements) இது போன்ற சத்தம் கேட்கும். சிலருக்கு வெறும் சத்தம் மட்டுமே கேட்கும். இன்னும் சிலருக்கு வயிற்றுப்போக்குடன் சேர்ந்து இந்தச் சத்தமும் வெளிப்படும்.
உணவு எடுத்துக்கொள்ளப் பிடிக்காமல் வாந்தி, வயிற்றுவலி போன்றவையும் ஏற்படலாம். வெறும் சத்தம் மட்டும் வருகிறது என்றால் அந்தப் பிரச்சினையை சற்று கவனிக்க வேண்டியிருக்கும். அடிக்கடி வருகிறது என்றால் மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம். வயிற்றில் வாய்வு அதிகம் உருவாகும்போதும், சாப்பிடும்போதும் இப்படி வரும் வாய்ப்புகள் அதிகம். சிலவகை தொற்றுகளின் காரணமாக குடல் இயக்கங்கள் அதிகரிக்கலாம். குடல் இயக்கம் அதிகரித்து, இந்தப் பிரச்சினை வரலாம்.
மற்றபடி வயிற்றுவலியோ, வாந்தியோ, வயிற்றுப்போக்கோ, எடை இழப்போ இல்லை என்கிற பட்சத்தில் சற்று பொறுத்திருந்து பார்க்கலாம். அதுவே அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைச் சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ட்ரை ஃப்ரூட் – பைனாப்பிள் ரோல்!
இடி, மின்னலுடன் மழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
விஜய் நடத்தும் முதல் மாநாடு எப்போது?: தேதி இதுதான்!
அம்பானியின் கனிவான கவனத்திற்கு… அப்டேட் குமாரு