ஆட்டம் போட்ட முன்னாள் வீராங்கனை மிதாலி ராஜ்: வைரல் வீடியோ!

டிரெண்டிங் விளையாட்டு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை போலவே மகளிருக்கான ஐபிஎல் (WPL) தொடர் இந்த ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான வீராங்கனைகள் ஏலமும் நடந்து முடிந்துவிட்டது.

டெல்லி கேபிடல்ஸ், குஜராத் ஜெயிண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உத்தரபிரதேச வாரியர்ஸ் என மொத்தம் 5 அணிகள் களமிறங்குகின்றன.

இதில் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் வழிகாட்டியாக மிதாலி ராஜ் உள்ளார்.

இந்த ஐபிஎல் தொடர் குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த போது, மகளிர் ஐபிஎல் இளம் வீராங்கனைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக திகழும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியாவில் மட்டுமல்ல, இன்னும் சில ஆண்டுகளில் வெளிநாட்டில் உள்ள கிரிக்கெட் வீராங்கனைகள் கூட இதுபோன்ற அமைப்பில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மிதாலி ராஜும் மற்ற இரு வீராங்கனைகளும் இன்ஸ்டாகிராமில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளனர். இந்த வீடியோ குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. தற்போது நெட்டிசன்கள் இந்த வீடியோவிற்கு தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

அதில், நிர்மல் ஜோதி என்ற நபர் “ இந்த ஐபிஎல் ஆட்டத்தில் நீங்கள் விளையாடி இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், சுபாஷ் அருண் என்பவர் “ எனது ஆதரவு எப்போதும் மிதாலி ராஜ் வழிகாட்டியாக இருக்கும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கே…நீங்கள் நடனம் ஆடுவது எங்களை உற்சாகப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஈரோடு கிழக்கு – முதல் சுற்று முடிவு – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பணநாயகம் வென்றுவிட்டது : அதிருப்தியில் கிளம்பிய அதிமுக வேட்பாளர்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.