எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆளுக்கொரு டயட் பெயரை குறிப்பிட்டு, ‘நான் இந்த டயட் இருந்துதான் பத்து கிலோ வெயிட் லாஸ் பண்ணேன்’, ‘அந்த டயட் இருந்துதான் டயாபடீஸை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்தேன்’, ‘இந்த டயட் இருந்துதான் கொலஸ்ட்ராலை குறைச்சேன்’ என்கிறார்கள்.
இந்த நிலையில் எல்லாம் எனக்கும் தெரியும் என்கிற மனநிலையில் சுயமாக டயட் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
“அப்படிப்பட்டவர்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்” என்கிறார்கள் டயட்டீஷியன்ஸ்.
“தினமும் இரண்டு காய்கறி, பழங்கள், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவை கட்டாயம் உங்கள் சாப்பாட்டுத் தட்டில் இருக்க வேண்டும்.
உடல் பருமனைக் குறைக்க வேண்டுமென்றால், மூன்று இட்லி சாப்பிடும் நீங்கள் இரண்டு இட்லி சாப்பிடலாம். அதை விடுத்து, சாப்பிடுவதைத் தவிர்ப்பது, நீர் மட்டும் அருந்துவது என்று இருந்தால், நிச்சயம் ஆரோக்கியமின்மை வரும்.
சில டயட்டில் புரதம், கொழுப்பு என ஏதோவொரு சத்தை மட்டும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். இதனால், உடல் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் சோர்வடைந்து விடுவீர்கள்.
கொழுப்புச்சத்தை அதிகமாக எடுக்க வேண்டிய டயட்டை ஃபாலோ செய்தால், உங்கள் கல்லீரல் பலவீனமாகலாம். பித்தப்பையில் கற்கள் உருவாகலாம்.
இந்தப் பிரச்சினைகள் ஏற்கெனவே இருந்தால் இந்த டயட் அவற்றை அதிகப்படுத்தி விடலாம்.
சீரான வளர்சிதை மாற்றத்துக்கும் உடல் இயக்கத்துக்கும் கலோரி அவசியம். அவை குறைவாகக் கிடைக்கும்போது, உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நல்ல கொழுப்பிலிருந்து கலோரிகள் எடுத்துக்கொள்ளப்படும். இது, மொத்த உடல் இயக்கத்துக்கும் நல்லதல்ல.
சில டயட்களில் கலோரிகளை தவிர்க்கவே அறிவுறுத்துவார்கள். இப்படித் தவிர்க்கும்போது உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சத்துகளும் உபயோகப்படுத்தப்பட்டு, உடலில் ஆற்றல் குறையத் தொடங்கும். இதனால், வளர்சிதை மாற்றம் தாமதமாகி, பிரச்னைகள் ஏற்படும்.
உடல் எடை அதிகரிக்கும்போது சருமம் விரிவடையும். எடை குறைந்தால் சருமம் சுருங்கும். பொருந்தாத உணவு முறைகளைப் பின்பற்றி வேகமாக எடையைக் குறைத்தால் சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படலாம்.
உடல் எடையைக் குறைத்து அழகாக வேண்டும் என்ற அடிப்படை விருப்பமே இதில் அடிபட்டுப்போகும்” என்று எச்சரிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மகாவிஷ்ணு சொற்பொழிவு விவகாரம் : தலைமை செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு!
பரம்பொருளைத் தவிர வேறு சில பொருள்: அப்டேட் குமாரு
அடுத்த இரண்டு தினங்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் : வானிலை மையம்!
பள்ளியில்… மாணவிகள்… பகீர் காட்சிகள்!