“இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்தை அடைவதற்கு மிக முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற நம்முடைய வாழ்க்கை முறையே” என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
“ஆரோக்கிய உணவு உட்கொள்ளாமை, உடற்பயிற்சி செய்யாமை, மது அருந்துதல், புகைப்பழக்கம், அதிகப்படியான கஃபைன் பயன்பாடு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற காரணங்களால் குறிப்பிட்ட வயதுக்கு முன்பாகவே முதுமையான தோற்றம் ஏற்பட்டு விடுகிறது.
மேலும், ஜங்க் ஃபுட் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது முதுமைத் தோற்றம் ஏற்படுவதைத் துரிதப்படுத்துகிறது.
இந்தப் பிரச்சினைகளைத் தவிர்க்க, காபி , டீ, மது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டியது அவசியம். பச்சை காய்கறிகள், பல்வேறு நிறங்களுடைய இயற்கையான உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்து அதிகமுடைய உணவுகளைத் தவிர்த்து, புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.
தண்ணீர் குடிப்பது மிக முக்கியமான ஒன்று. ஒரு நாளைக்கு சராசரியாக 6 – 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இரவு தூக்கம் சரியாக இருந்தால்தான் உடலில் கொழுப்பு, தசை, திசுக்கள், எலும்பு போன்றவற்றை முறைப்படுத்தும் வளர்ச்சி ஹார்மோன் சுரப்பு இயல்பாக இருக்கும். அது உடலையும் சீராக வைத்திருக்கும்.
இதைக் கடைப்பிடிக்காத பட்சத்தில், நம் உடலில் உள்ள உறுப்புகள் சீராக செயல்படாது. எனவே, இரவு 8 மணி நேரத் தூக்கம் அவசியம்.
காலை 11 மணி முதல் 4 மணி வரை புற ஊதாக்கதிர்களின் வீச்சு அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் வெளியே சென்றால், அவை நமது சருமத்தை பாதித்து வயதான தோற்றத்தைக் கொடுக்கலாம். எனவே, சூரியன் சுட்டெரிக்கும்போது வெளியே செல்வதைத் தவிர்த்துவிட வேண்டும். அப்படிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தலை முதல் கால் வரை அனைத்தையும் கவர் செய்துவிட்டு செல்ல வேண்டும்.
முகம், கழுத்து போன்ற வெயிலுக்கு வெளிப்படும் இடங்களுக்கு சன்ஸ்கிரீன் போட்டுக் கொள்வதோடு சன் கிளாஸ் அணியலாம். பாலியெஸ்டர், பிளாஸ்டிக் குடைகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. வெயில் நேரத்தில் கடற்கரை, நீச்சல்குளம் உள்ளிட்ட மணல் மற்றும் தண்ணீர் இருக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம். காரணம், அது போன்ற இடங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் சருமத்தை பாதிக்கும்.
இவை அனைத்தையும்விட மன அழுத்தம் இல்லாத வாழ்க்கையை வாழ வேணடியது முக்கியமான விஷயம். மன அழுத்தம், கவலை போன்றவை வயதான தோற்றம் ஏற்பட காரணமாகலாம். ஆரோக்கியமான உணவுப் பழக்கம் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இந்தப் பிரச்னை மேலும் தீவிரமடையாமல் தடுக்க முடியும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இந்த நல்ல ஐடியாவா இருக்கே: அப்டேட் குமாரு
எம். ஜி. ஆர் ரசிகராக கார்த்தி… படத்தின் டைட்டில் இதோ!
மோடி சொன்ன அந்த வார்த்தை: பொங்கி எழுந்த இந்தியா கூட்டணி!
நன்றி சொல்ல உனக்கு… வாய்ப்பு வந்தது எனக்கு… சோனியாவை அழைக்கும் ரேவந்த் ரெட்டி