பிளிப்கார்ட் பிக் தீபாவளி: ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

டிரெண்டிங்

பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆஃபர் சேல் முடிந்த நிலையில், தற்போது மீண்டும் தீபாவளி சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசானுக்குப் போட்டியாக பிளிப்கார்ட் நிறுவனமும் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது.

கடந்த மாதம் தொடங்கிய இந்த தள்ளுபடி விற்பனையில் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு பல்வேறு விதமான ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த சலுகைகள் நேற்று (அக்டோபர் 16 ) ஆம் தேதியோடு முடிவடைந்தன.

இந்நிலையில், தற்போது பிளிப்கார்ட்டில் தீபாவளி தள்ளுபடி விற்பனை மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 19 ஆம் தேதி முதல், 23 ஆம் தேதி வரை எலக்ட்ரானிக் பொருட்களுக்கு 80 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது.

இந்த பிக் தீபாவளி சேலில் ரியல்மி, போகோ, ஒப்போ, ரெட்மி, ஐபோன், மோட்டோ உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்கள், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஆஃபர்கள் உள்ளன.

ஏசிகளுக்கு 55 சதவீீதம் வரையில் தள்ளுபடி, ஆடைகளுக்கு 60 முதல் 90 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு ரூபாய் ஆஃபர் என்பது குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் ஆஃபர்கள் விவரங்களை உடனடியாக தெரிந்துகொள்ள ஏதுவாக நோட்டிபிக்கேஷன் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்களது இமெயில், மொபைல் நம்பர் கொடுத்து ஆஃபர் குறித்த உடனடி அறிவிப்பை பெறலாம்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

மாணவி சத்யா கொலை: ரயில் ஓட்டுநரிடம் சிபிசிஐடி விசாரணை!

டி20 உலகக்கோப்பை: அதிவேகமாக சதம் அடித்த வீரர்கள் யார் யார் ?

+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0