இன்றுடன் முடிவடையும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி ஆஃபர்!

டிரெண்டிங்

அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கிய பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனை இன்றுடன் (அக்டோபர் 23 ) முடிவுக்கு வருகிறது.

அக்டோபர் 11 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையிலான பிக் தீபாவளி விற்பனைக்குப் பின் விற்பனையின் 2ம் பகுதி பிரபலமானது.

இந்த வருடம் செப்டம்பர் 23 ஆம் தேதியன்று தொடங்கிய பிக் பில்லியன்டேஸ் விற்பனைக்கு பிறகு அடுத்தடுத்து பல்வேறு விழாக்கால சலுகைகளை கொண்டு வந்தது இ-காமர்ஸ் சில்லறை விற்பனைத் தளமான பிளிப்கார்ட்.

பிக் தசரா சேல் மற்றும் பிக் தீபாவளி சேல் விற்பனைகளை கொண்டுவந்து வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியளித்தது. தீபாவளி விற்பனை 2022 கீழ் ப்ளிப்கார்ட் ஸ்மார்ட் போன்களின் வரம்பில் பல்வேறு தள்ளுபடிகளை அளித்துள்ளது.

நோட்டிங் போன் 5G 8ஜிபி/128 ஜிபி ப்ளிப்கார்ட்டில் ரூ.29,999க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

அனைத்து தள்ளுபடிகளுக்கும் பிறகு இந்த ஸ்மார்ட்போன் ரூ.26,999க்கு தற்போது பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் கிடைக்கிறது.

இஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு எஸ்பிஐ கிரெடிட்/டெபிட் கார்டுகளில் வழங்கப்படும் தள்ளுபடிகளை இணைத்த பின் குறைவான விலையில் இப்போனை வாங்கமுடியும்.

கூகுள் பிக்சல் 6 ஏவின் 6GP/128GP மாடல் போனை வாங்க SBI கார்டு தள்ளுபடிகள் பொருந்தும் என்பதால், 27,999 தள்ளுபடி விலையில் இதனைப் பெறலாம். இது தவிர்த்து பழைய ஸ்மார்ட் போன்களுக்கு ரூபாய்.18,500 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும் வங்கி வழங்குகிறது.

இந்த பிக் தீபாவளி சேலில் ரியல்மி, போகோ, ஒப்போ, ரெட்மி, ஐபோன், மோட்டோ உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்கள், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஆஃபர்கள் உள்ளன.

ஏசிகளுக்கு 55 சதவீம் வரையில் தள்ளுபடி, ஆடைகளுக்கு 60 முதல் 90 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டன . இந்த தள்ளுபடிகள் அனைத்தும் இன்றுடன் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ஜி.பி.முத்து: வைல்டு கார்டு மூலம் நுழையும் போட்டியாளர் யார்?

மூன்றாவது முறையாக சீன அதிபரானார் ஜி ஜின்பிங்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *