ஆட்குறைப்பில் தீவிரம் காட்டும் பிளிப்கார்ட், ஸ்விக்கி… காரணம் என்ன?

இந்திய முன்னணி நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி ஆகியவை ஆட்குறைப்பு நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளன.

இந்த 2024-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், பேஸ்புக் என உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது ஊழியர்களை, தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகின்றன.

இதற்கு பல்வேறு காரணங்களை மேற்கண்ட நிறுவனங்கள் சொன்னாலும் கூட, ஏஐ தொழில்நுட்பம் தான் இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களான பிளிப்கார்ட் மற்றும் ஸ்விக்கி ஆகிய இரண்டு நிறுவனங்களும் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

தற்போது பிளிப்கார்ட் நிறுவனத்தில் 22,௦௦௦ ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் நிறுவன மறுசீரமைப்பு என காரணம் காட்டி 5% பேரை, அதாவது 1௦௦௦ ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப பிளிப்கார்ட் முடிவு செய்துள்ளது.

இதேபோல ஸ்விக்கி நிறுவனமும் தன்னுடைய செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக, சுமார் 6% ஊழியர்களை அதாவது 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

இதனால் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிளிப்கார்ட், ஸ்விக்கி இரண்டு நிறுவனங்களுக்கும் ஆட்குறைப்பு நடவடிக்கை ஒன்றும் புதிதில்லை.

என்றாலும் வரும் நாட்களில் பிற நிறுவனங்களிலும் இது எதிரொலிக்குமா? என்ற அச்சம் தற்போது ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

layoffs.fyi நிறுவனத்தின் அறிக்கைப்படி இந்த 27 நாட்களில் மட்டும் உலகம் முழுவதுமுள்ள 91 நிறுவனங்களில் இருந்து 24,564 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்துக்கள் மோடியிடம் விழிப்பாக இருங்கள்: திருமா ஆவேசம்!

காங்கிரசோடு உடன்பாடு ஸ்டார்ட்: இந்தியா கூட்டணிக்கு அகிலேஷ் குட் நியூஸ்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts