இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான விக்ரம் – எஸ் இன்று(நவம்பர் 18) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஐதராபாத்தைச் சேர்ந்த புத்தொழில் நிறுவனமான ஸ்கைரூட் ஏரோ-ஸ்பேஸ் விக்ரம்-எஸ் என்ற நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்டை தயாரித்தது.
பிராரம்ப்’ திட்டத்தின்கீழ் தனியார் துறையினரால் வடிவமைக்கப்பட்டு, கட்டமைக்கப்பட்ட ராக்கெட்டை ஸ்கைரூட் நிறுவனம் முதன்முறையாக இந்தியாவிலிருந்து விண்ணிற்கு அனுப்ப திட்டமிட்டது.
அதன்படி, இந்திய தனியார் விண்வெளித் துறையின் வரலாற்று நிகழ்வாக, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து விக்ரம்–எஸ் ராக்கெட் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.
சரியாக 11.30மணிக்கு 3செயற்கைகோள்களை சுமந்தபடி ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

3டி உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களுடன் விக்ரம்-எஸ் ராக்கெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நிலையைக் கொண்ட விக்ரம் – எஸ் ராக்கெட் 545 கிலோ எடையும், 6 மீட்டர் உயரமும், 0.375 மீட்டர் விட்டமும் கொண்டது.
விக்ரம் – எஸ் ராக்கெட் 7 டன் உந்து சக்தியை கொண்டது. அதிகபட்சமாக 480 கிலோ எடையை சுமந்து செல்லும்.
ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா, பஜூம்க் ஆர்மீனியா, என்-ஸ்பேஸ் டெக் இந்தியா ஆகிய மூன்று செயற்கை கோள்களை இந்த ராக்கெட் சுமந்து செல்கிறது.

அதிகபட்சமாக 83கிலோ கிராம் எடை கொண்ட 3 செயற்கை கோள்களையும், புவியின் மேற்பரப்பில் சுமார் 100கி.மீ. உயரத்தில் ஆய்வுப் பணிகளுக்காக நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை இஸ்ரோ தயாரிப்பில் ஜி.எஸ்.எல்.வி மற்றும் பி.எஸ்.எல்.வி ஆகிய இரண்டு ராக்கெட்டுகள் மூலம் மட்டுமே செயற்கைகோள்கள் விண்ணுக்கு ஏவப்பட்டன.
இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாய் நினைவாக, இந்த ராக்கெட்டுக்கு விக்ரம்-எஸ் னெ பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த வரிசையில் தொடர்ந்து பல ராக்கெட்டுகளை ஸ்கைரூட் ஏவ இருக்கிறது. விக்ரம்-எஸ் ராக்கெட்டைத் தொடர்ந்து விக்ரம் வரிசையின் அடுத்த 3 ராக்கெட்டுகள் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளன.
கலை.ரா
பிரியா வழக்கு: முன் ஜாமீன் கேட்கும் மருத்துவர்கள்!
இரவில் ஊராட்சி மன்ற தலைவருக்கு நேர்ந்த கொடூரம்!