ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் ’ஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் 2022’ நிகழ்வை இலவசமாக லைவ்வாகப் பார்க்கும் வாய்ப்பை ஜியோ வழங்க இருக்கிறது.
இந்த ஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் 2022 கால்பந்து போட்டி வரும் நவம்பர் 20 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 18, 2022 வரை நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்டமான கால்பந்து போட்டியை ஜியோ வாடிக்கையாளர்கள் இலவசமாக பார்க்கலாம்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வியாகம்18 ஸ்போர்ட்ஸ், ஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் 2022 நிகழ்வை அறிமுகம் செய்ய உள்ளது.
“இதைவிட பெரிதாக எதுவும் இல்லை” என்ற பிரச்சாரத்தின் பெயரில் இந்த நிகழ்வு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் ஜியோ வாடிக்கையாளர்கள் அனைவரும் ஃபிஃபா உலகக் கோப்பை கத்தார் போட்டியை நேரலையில் காணும் அருமையான வாய்ப்பு உருவாகியுள்ளது.
ஜியோ சினிமா அனைத்து சந்தாதாரர்களுக்கும் எதிர்வரும் ஃபிஃபா உலகக் கோப்பை போட்டி நேரலையாக வெளியிடப்படவுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்கள், தங்களுடைய ஸ்மாரட்போனில் ’ஜியோ சினிமா’ செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் அவர்கள் லைவ் ஸ்ட்ரீம்மை காணலாம். இதற்கு எந்த கட்டணமும் இல்லை.
மேலும், இந்த உலகக் கோப்பையை தமிழ், பெங்காலி மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் பார்க்க ஜியோ சினிமா செயலி ஏற்பாடு செய்துள்ளது. இது தற்போது ஜியோ வாடிக்கையாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
’அடி ஆத்தி இது என்ன ஃபீலு’: வெளியான ‘வாத்தி’ முதல் பாடல்!
கருப்பாக இருப்பதால் நிராகரிக்கப்பட்டேன்: பிரியங்கா சோப்ரா