கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் பாண்டிச்சேரியில் ஃபிஃபா இட்லி மக்களிடம் பிரபலமாகி வருகிறது.
கத்தாரில் கால்பந்து போட்டிகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன. தீவிர கால்பந்து ரசிகர்கள் நேரடியாக கத்தாருக்கே சென்று போட்டிகளைப் பார்த்து வருகின்றனர்.
கத்தாருக்குச் செல்ல முடியாத ரசிகர்கள் பலர் தொலைக்காட்சி மூலமாகவும் செல்போன் மூலமாகவும் போட்டிகளைப் பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கால்பந்து ரசிகர்களை ஈர்க்கும் வகையில், புதுச்சேரியில் உள்ள சற்குரு சைவ உணவகத்தில் ஃபிஃபா இட்லி தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த ஃபிஃபா இட்லி சாதாரண இட்லி போல் இல்லாமல் பெரிய அளவில் தயார் செய்து அதன்மேல் கால்பந்து வடிவத்திற்கு ஒரு அச்சினை பயன்படுத்துகின்றனர்.
இட்லி மேல் நெய் ஊற்றிப் பொடி தூவி ஒரு இட்லி ரூ. 90-க்கு விற்கப்படுகிறது. இந்த புதுவிதமான ஃபிஃபா இட்லி சுற்றுலாப் பயணிகளிடம் மட்டுமல்லாது உள்ளூர் மக்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மோனிஷா
சிறுத்தைகள் Vs பாமக: பதற்றத்தில் கடலூர்- மெத்தனத்தில் மாவட்ட நிர்வாகம்!
அது மட்டும் தான் தோல்விக்கான காரணமா: கவாஸ்கர் அதிரடி கருத்து!