சீக்கிரத்தில் எடை குறைய வேண்டும் என்று பலரும் உண்ணாவிரதம் இருப்பார்கள். ஆனால், மருத்துவர்களும், உணவு ஊட்டச்சத்து நிபுணர்களும் உண்ணாவிரதம் இருப்பதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
“எடை இழக்க உண்ணாவிரதம் சிறந்த வழி அல்ல. உண்ணாமல் இருப்பது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடிய விஷயம். இரவில் ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்கு தூங்குகிறோம். இந்த நேரத்தில் எந்த உணவையும் நாம் எடுத்துக்கொள்வது இல்லை. இது இயற்கை செயல்பாடு என்பதால் உடலுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது.
காலை விழித்ததும் காலை உணவைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உண்ணாமல் இருந்ததைத் தடுப்பதால்தான், காலை உணவை ‘பிரேக்ஃபாஸ்ட்’ என்றே கூறுகிறோம். ஆனால், பலரும் உடல் எடையைக் குறைக்க காலை உணவைத் தவிர்ப்பது மிகத் தவறான பழக்கம்.
நீண்ட நேரம் சாப்பிடாமல் இருந்து சாப்பிடும்போது அளவில்லாமல் சாப்பிடுவார்கள். இதனால், உணவை நன்கு மெல்லாமல், ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படும். சாப்பிடாமல் இருப்பதால் ஹைபர்கிளைசிமியா (Hyperglycemia) எனப்படும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பு, நடுக்கம் போன்ற பிரச்சினைகள் வர அதிக வாய்ப்புள்ளது. முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள், சர்க்கரை நோயாளிகள் ஒருபோதும் உண்ணா நோன்பு இருக்கவே கூடாது” என்று அறிவுறுத்துகிறார்கள்.
மேலும், “உடலை ஸ்லிம்மாக்க மருத்துவர்களின் ஆலோசனைபடி உணவை எடுத்துக்கொள்வதே நல்லது. இது அனைத்து வயதினருக்கும் பொருந்தும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : காங்கிரஸின் ஆளுநர் மாளிகை முற்றுகை முதல் சென்னைக்கு ரெட் அலர்ட் வரை!
கிச்சன் கீர்த்தனா : முள்ளங்கிச் சட்னி
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: அனுஷம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: விசாகம்!
மார்கழி மாத நட்சத்திர பலன்கள்: சுவாதி!
அட்லீ நிறம் குறித்து பேசிய கபில் சர்மா… சின்மயி கொடுத்த பதிலடி!
”பாஜக மீது எடப்பாடிக்கு பயமும் அதிகம்… பாசமும் அதிகம்” : கே.என்.நேரு விமர்சனம்!