நடிகர் அஜித்குமார் நாளை தனது 52ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார். இதனை முன்னிட்டு அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக மதுரையில் ரசிகர்கள் போஸ்டர் வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்ட அஜித் நாளை தனது 52ஆவது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ளார்.
இதனை முன்னிட்டு அவருக்கு இப்போதே ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதோடு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஏகே 62 படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட இருக்கிறது. இதனால் அஜித் ரசிகர்கள் #AK62 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
இந்தச்சூழலில் மதுரையில் அஜித்குமார் ரசிகர்கள் தலைமைச் செயலகத்துடன் கூடிய போஸ்டரை ஒட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள்னர்.
அதில், மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்… உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்குத் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த போஸ்டரும் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் இப்படி வைத்திருக்கின்றனர் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பிரியா
சிஎஸ்கேவை தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ்!
ஏசி பயன்படுத்தினால் கூடுதல் மின் கட்டணமா?