சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வந்த பஸ்ஸை ரசிகர்கள் சூழ்ந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 16 வது சீசன் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.
இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த இடங்களுக்கான போட்டியில் சென்னை, லக்னோ, மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் இருக்கின்றன.
இதில், இன்று டெல்லியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது ஐபிஎல் போட்டி நடந்து வருகிறது. இதற்காக சென்னை வீரர்கள் மைதானத்திற்கு பேருந்தில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் வந்த பஸ்ஸை சூழ்ந்து கொண்ட ரசிகர்கள் தோனி, தோனி என்றும், சிஎஸ்கே என்றும் கோஷமிட்டனர்.
இந்த வீடியோ காட்சிகள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இன்று நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்குள் 2ஆவது அணியாக செல்ல முடியும் . இல்லையென்றால், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் சூழல் ஏற்படும்.
தற்போது நடைபெற்று வரும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்களை குவித்துள்ளது. 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
2 மணி நேரத்தில் 5 வாக்குறுதிகள் சட்டமாக மாறும்: ராகுல் காந்தி
ஐபிஎல்: ஜெய்ஸ்வால் படைத்த புதிய சாதனை!