இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.
விராட் கோலி வேறு நாடுகளில் விளையாடும் போதுகூட, இவர் விளையாடும் போட்டிகளை நேரில்சென்று பார்க்கும் தீவிர ரசிகர்களும் உண்டு.
ஒவ்வொரு முறையும் இவரது ரசிகர்கள் பலர் இவரைச் சந்திப்பதற்குப் பல வித்தியாசமான காரியங்களைச் செய்வது உண்டு.
அந்த வகையில் தான் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கபில் என்ற ரசிகர், விராட் கோலியை எப்படி சந்தித்தார் என்ற வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “விராட் கோலி மற்றும் அனுஷ்காவை சந்தித்த நாள்(17.11.2022)” என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் ”உத்தரகாண்ட் நைனிடால் அருகே அல்மோரா சாலையில் உள்ள கைஞ்சி தாம் கோவிலுக்கு விராட் கோலி செல்வதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதனால் நானும் எனது நண்பர்களும் விராட் கோலி வருவதற்குள் அங்கு செல்ல வேண்டும் என்று காலை 6மணியளவில் பயணத்தைத் துவங்கினோம்.
அந்த இடத்தை அடைந்தவுடன் நாங்கள் அங்குள்ள மக்கள் பலரிடம் விராட் கோலியின் வருகை குறித்து விசாரித்தோம். ஆனால் அங்கிருந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கதைகளை எங்களிடம் கூறினர்.
அதில் சிலர் விராட் காலை 5மணிக்கே கோவிலுக்குள் சென்று விட்டதாகக் கூறினர். ஆகையால் நாங்கள் விராட் கோலி வெளியே வரும் வரை காத்திருக்கலாம் என்று முடிவு செய்தோம்.
நம்பிக்கையுடன் நாங்கள் காத்திருந்து விராட் கோலியை சந்தித்து விட்டோம். அவர் என்னிடம் ரகசியமாக ‘என் மகள் காரில் அமர்ந்திருக்கிறார். அவரை வீடியோ மற்றும் புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என்று கூறினார்” என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் பல மில்லியன் பார்வைகளை பெற்று வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் நீங்கள் அதிர்ஷ்டசாலிகள், இது பலரது கனவு என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மோனிஷா
“இனி யாரையும் இழக்கக்கூடாது”: முதல்வர் வேண்டுகோள்!
டெல்லி போலீசுக்கு ரூ.5.5 கோடி பரிசு வழங்கும் ஆஸ்திரேலியா அரசு?