பதான் ஓடிடி வெர்ஷன்: ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

Published On:

| By Monisha

பதான் திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் “extended version” ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று டிரண்டிங்கில் உள்ளது.

இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “பதான்”. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான இந்த படம் இதுவரை 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் அதிக வசூல் செய்த இந்தி படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

உலகளவில் ரூ.1,050 கோடியை வசூலித்த பதான் இந்தியாவில் மட்டும் ரூ.541 கோடி வசூலித்துள்ளது. படம் வெளியாகி ஒரு மாதங்களுக்குத் திரையரங்குகளில் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பதான் திரைப்படம் நேற்று (மார்ச் 22) வெளியானது. என்னதான் பதான் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்திருந்தாலும் ஷாருக்கான் ரசிகர்கள் மீண்டும் அமேசான் பிரைமில் பார்க்க வேண்டும் என்று நினைத்தனர்.

அந்த வகையில் ஓடிடி தளத்தில் பதான் படத்தைப் பார்த்த பலருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் திரையரங்கு வெளியீட்டின் போது படத்தில் இடம்பெறாத காட்சிகள் சில ஓடிடி ரிலீஸில் இடம்பெற்றிருந்தது.

https://twitter.com/amanaggar/status/1638249206438588441?s=20

அதனைக் கண்ட ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் அவர்களது அனுபவத்தைப் பகிரத் தொடங்கினர்.

ரசிகர் ஒருவர் “இந்த தோற்றத்திற்கும் காட்சிக்கும் இப்போது தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொல்லலாம்” என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகர், ”இந்த காட்சிகள் ஏன் படத்தில் இருந்து நீக்கப்பட்டது” என்று கேட்டுள்ளார்.

மேலும் ஒரு ரசிகர், “நீக்கப்பட்ட காட்சிகளுடன் படத்தைப் பார்த்தது புதிய அனுபவமாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார்.

ரசிகர்களின் பதிவால் பதான் ஓடிடி வெர்ஷன் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கடந்த 4 வருடங்களாக ஷாருக்கான் நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை என்றாலும் சிறப்புத் தோற்றத்தில் மட்டும் நடித்து வந்தார். இந்நிலையில் பதான் திரைப்படத்தின் வெற்றி அவருடைய திரைவாழ்க்கையில் முக்கியமான ஒரு படமாகப் பார்க்கப்பட்டது.

அதன்படி பதான் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதோடு ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மோனிஷா

ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா: மீண்டும் தாக்கல் செய்த முதல்வர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel