கால்பந்து ரசிகர் ஒருவர் அறுவை சிகிச்சையின் போது கால்பந்து போட்டியைப் பார்த்த புகைப்படத்தைத் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
கத்தாரில் கால்பந்து போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 4 வருடங்களுக்கு ஒரு முறை போட்டிகள் நடந்தாலும் கால்பந்து போட்டிக்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகம்.
அரபு நாடான கத்தாரில் நடைபெறும் போட்டியை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் நேரடியாகச் சென்றுள்ளனர். மேலும் பல ரசிகர்கள் நேரில் செல்ல முடியவில்லை என்றாலும் நேரத்தை ஒதுக்கித் தவறாமல் போட்டிகளைப் பார்ப்பதுண்டு.
இந்நிலையில், போலாந்தை சேர்ந்த கால்பந்து ரசிகர் ஒருவர் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது கால்பந்து போட்டியைப் பார்த்துள்ளார்.
இந்த அறுவை சிகிச்சையானது போலாந்தின் கீல்ஸ் நகரில் உள்ள எஸ்பி ஸோஸ் ம்ஸ்வியா (SP ZOZ MSWiA) மருத்துவமனையில் நடைபெற்றது. இதனை மருத்துவமனை நிர்வாகம் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
இந்த பதிவினை இந்தியத் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஹே ஃபிஃபா, இந்த ஜென்டில்மேன் எதாவது கோப்பைக்குத் தகுதியுடையவர் என்று உங்களுக்கு தோன்றவில்லையா?” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கால்பந்து ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
மோனிஷா
குஜராத் வெற்றி: சொன்னதை செய்த மோடி
“ஜெ. நினைவுநாள் நன்னாள் என்றதில் தவறில்லை” – அதிமுக எம்எல்ஏ பேட்டி