நாடு முழுவதும் இன்று காலை மக்கள் விழித்தெழுந்து பார்க்கும் போது, பேஸ்புக்கில் தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
பேஸ்புக்கில் ஏற்பட்ட இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக, லட்சக்கணக்கான மக்கள் தங்களது பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையை இழந்துள்ளார்கள்.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் கூட இதிலிருந்து தப்பிக்கவில்லை.
மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஒரே இரவில் கிட்டத்தட்ட 100 மில்லியனில் இருந்து 9993-ஆக குறைந்தது.
இதற்கான காரணம் பேஸ்புக்கில் தொழில்நுட்ப பிரச்சினையாக இருக்கலாம் என பலரும் சந்தேகிக்கிறார்கள்.
இதனால் பேஸ்புக் பயனாளர்கள் பலரும் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது குறித்து பேஸ்புக் நிறுவனத்திடம் புகாரளித்துள்ளனர்.
தி நியூயார்க் டைம்ஸ், நியூயார்க் போஸ்ட் போன்ற செய்தி தளங்களில் அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறு குறித்து பேஸ்புக் நிறுவனம் கூறும்போது, “ஃபேஸ்புக்கில் உள்ள பல போலி கணக்குகளை நீக்குவதே எங்கள் நோக்கம்.
எங்கள் கொள்கைகளை மீறி தீங்கிழைக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட கணக்குகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக்கில் போலி கணக்குகளை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, பேஸ்புக் தரப்பில் கூறினாலும், ”மார்க் ஜூக்கர்பெர்க்கை பின்தொடர்பவர்களும் போலி கணக்குகளை பயன்படுத்தினார்களா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.
செல்வம்
அரசு ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!
பைக்கை தூக்கியடித்த காட்டு யானை: பதறியோடிய மக்கள்!