முன்பெல்லாம், ஒரு 50 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்குத்தான் சருமம் தளர்ந்துபோவது போன்ற ஏஜிங் பிரச்சினைகள் ஆரம்பிப்பதைப் பார்ப்போம். இப்போதெல்லாம், மாறிவரும் வாழ்க்கைச் சூழல் காரணமாக 25, 30 வயது உள்ளவர்களே `ஸ்கின் லூஸ் ஆகிறது’ என்கிறார்கள்.
சில எளிய அழகு சிகிச்சைகளை வீட்டிலேயே மேற்கொண்டால் முகச்சருமம் தொய்வடைவதைத் தடுக்க முடியும் என்கிறார்கள் பியூட்டி தெரபிஸ்ட்ஸ்.
“முகச் சருமம் இறுக்கம் ஆவதற்கு அதிக செலவில்லாத சில எளிமையான வழிகள் உள்ளன. வெள்ளரிக்காயை வட்ட வடிவத் துண்டாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதை முகத்தில் தேய்த்து க்ளென்ஸ் (Cleanse) செய்யுங்கள். அடுத்து, பட்டர் ஃப்ரூட் என்று சொல்லப்படும் அவகாடோ பழத்திலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய் ஆன்ட்டி ஏஜிங்குக்கு மிகவும் நல்லது. மிகவும் தளர்வான சருமம் இருந்தாலோ, கோடுகள் மற்றும் சுருக்கங்கள் தென்பட்டாலோ இந்த எண்ணெயை வைத்து மசாஜ் கொடுத்தால் நல்ல பலனைத் தரும். இந்த எண்ணெயைக் கொஞ்சமாகக் கைகளில் எடுத்து முகம் முழுக்க மசாஜ் செய்யுங்கள். இப்படிச் செய்யும்போது முகத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும். இதில் இருக்கக்கூடிய வைட்டமின்-ஈ, சருமத்திற்கு ஆன்ட்டி ஏஜிங் எஃபக்ட்டையும் கொடுக்கும்.
அவகாடோ எண்ணெயால் மசாஜ் பண்ணும்போது எலாஸ்டின், கொலாஜன் என்கிற இரண்டு விதமான புரதங்கள் சருமத்திற்குக் கிடைக்கும்படி தூண்டப்படும். இவை, சருமம் தொய்வடைவதைத் தடுக்கும். குறிப்பாக, வெயிலின் தாக்கம் போன்ற வெளிப்புற காரணங்களினால் சருமம் மூப்படையும் பிரச்சினைக்கு அவகாடோ எண்ணெய் மிகவும் நல்லது.
எனவே, தினமுமே சில சொட்டுகள் அவகாடோ எண்ணெயை எடுத்து, குளிக்கச் செல்வதற்கு முன்னால் முகத்தில் தடவி மசாஜ் பண்ணிவிட்டு, அரை மணி நேரம் கழித்து கழுவினால்… சருமம் மிக மென்மையாகவும் பொலிவாகவும் ஆகும். முகத்தில் கோடுகள், தொய்வு, சுருக்கம் போன்றவை வராமலும் தடுக்கும். அவகாடோ எண்ணெய் கிடைக்கவில்லையெனில், பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றைக்கூடப் பயன்படுத்தலாம்.
அவகாடோ எண்ணெயை வைத்து முகத்திற்கு மசாஜ் கொடுத்த பிறகு, ஒரு ஃபேஸ்பேக் போட வேண்டும். அதற்கு, இரண்டே இரண்டு பொருள்கள் போதும். காபித்தூள் மற்றும் கற்றாழை. தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்க, ஒரு பவுலில் இரண்டு ஸ்பூன் சுத்தமான கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் ஒரு ஸ்பூன் காபி பவுடரை சேர்த்துக் கலவையை நன்கு கலந்து கொள்ளுங்கள். இன்ஸ்டன்ட் காபியில் சிக்கரி இருக்கும் என்பதால் சிக்கரியே சேர்க்கப்படாத பிளெயின் காபித்தூளைப் பயன்படுத்துங்கள். காபித்தூள் ஒரு ஆன்ட்டி ஆக்சிடன்ட்டாகச் செயல்படும் என்பதால், இது கொலாஜனின் அளவை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது.
கலந்து வைத்துள்ள இந்தக் காபித்தூள் – கற்றாழை ஜெல் கலவையை முகத்தில் பேக் போல அப்ளை பண்ணுங்கள். 10 நிமிடங்கள் கழித்து துணியைத் தண்ணீரில் நனைத்தெடுத்து முகத்தில் போடப்பட்டுள்ள பேக்கை சுத்தம் செய்யுங்கள். பிறகு, உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தால், முகச்சருமம் மென்மையாகவும் புத்துணர்வுடனும் இருப்பதோடு இறுக்கமாகி இருப்பதையும் உணர முடியும். கடைசியாக, முகத்தில் கொஞ்சம் சன்ஸ்க்ரீனை அப்ளை செய்துகொள்ளுங்கள். அவ்வளவுதான்… டாலடிக்கும் முகம் உங்கள் வசமாகிவிடும்!’’ என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : தானிய கஞ்சி
டிஜிட்டல் திண்ணை: பெரியார் திடல் விசிட்… முப்பெரும் விழா தினத்தில் விஜய் ரகசிய ஆபரேஷன்!
“ஸ்டாலின் என்றாலே உழைப்பு” – ஏஐ தொழில்நுட்பத்தில் கலைஞர் உரை!
பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு ஸ்பெஷல் பஸ்!