மழைக்காலம் தொடங்கிவிட்டது. மழைக்காலத்தில் வாட்டர் ப்ரூஃப் மேக்கப் அயிட்டங்களைப் பயன்படுத்துவது நல்லது.
குறிப்பாக, காஜல் வகைகள் தண்ணீர் பட்டால் அழிந்து, கண்களைச் சுற்றி எளிதில் நீக்க முடியாத கறுமையாகப் படர்ந்துவிடும் என்பதால், வாட்டர் ப்ரூஃப்பை லைனர், மஸ்காரா போன்றவற்றைப் பயன்படுத்தலாம். மேலும், வாட்டர் ப்ரூஃப் ஃபவுண்டேஷனை முகத்தில் அப்ளை செய்தபின் பவுடர் உபயோகிக்கலாம்.
க்ரீமி மற்றும் க்ளாசி லிப்ஸ்டிக்கை உபயோகிக்கலாம். மேட் லிப்ஸ்டிக் பயன்படுத்துபவர்கள் இரண்டு முதல் மூன்று கோட்டிங் லிப் பாம் அப்ளை செய்தபின் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.
பார்ட்டி போன்ற நிகழ்வுகளுக்கு, பளபளக்கும் பிளிங் (Bling) மேக்கப் பக்கா சாய்ஸ். கண்டிப்பாக மேட் ஃபினிஷ் மேக்கப்பைத் தவிர்க்கவும்.
மழைக்காலங்களில் சருமம் அதிகம் வறண்டு போகும் என்பதால், கை, கால்களில் மாய்ஸ்ச்சரைசர் அல்லது பாடி பட்டர் (Body Butter) உபயோகிப்பது மிகவும் நல்லது.
சாதாரண மாய்ஸ்ச்சரைசரைவிட பாடி பட்டர் நீண்ட நேரம் ஈரப்பதத்தை உடலில் தக்கவைத்துக்கொள்ள உதவும். மிகவும் ஆய்லி ஸ்கின் உடையவர்கள், வாட்டர் பேஸ்டு மாய்ஸ்ச்சரைசரை (Water Based Moisturiser) உபயோகிக்கலாம்.
வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை ஸ்டீம் அல்லது ஆவி பிடிப்பது நல்லது. நார்மல், டிரை ஸ்கின் உள்ளவர்கள் ஏதாவதொரு எசென்ஷியல் ஆயில் இரண்டு சொட்டுகள் எடுத்து, முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து, பின்னர் கழுவலாம். அவற்றில் குங்குமாதி தைலம் சிறந்தது.
முகத்துக்கு வைட்டமின் சி மற்றும் ஆன்ட்டி-ஆக்ஸிடென்ட்ஸ் நிறைந்துள்ள பொருட்களை உபயோகிக்கலாம். அந்த வகையில் மாதுளை மற்றும் வாழைப்பழம் ஃபேஸ் பேக்குகள் நன்மை தரும்.
தேவையான அளவு மாதுளை ஜூஸ் மற்றும் ஓட் மீல்ஸை (Oat Meals) வெதுவெதுப்பான நீரில் கலந்து முகத்தில் அப்ளை செய்து 15 – 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். இது நிச்சயம் மழைக்காலத்தில் சருமத்தை ஹெல்தியாக வைத்துக்கொள்ள உதவும்.
வாழைப்பழத்தை நன்கு மசித்து, முகத்தில் அப்ளை செய்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். வாழைப்பழத்திலுள்ள ஈரப்பதம் போகும் வரை மசாஜ் செய்யலாம்.
தினமும் இரவு தூங்குவதற்கு முன் இப்படிச் செய்துவர, இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு முகம் புத்துணர்வு பெறும்.
இதுபோன்ற பழங்களை ஃபேஸ் பேக்காகப் பயன்படுத்துவதைவிட, பழமாகச் சாப்பிடுவது மேலும் சிறந்தது. இது, 95% சிறந்த ரிசல்ட் கொடுக்கும்” என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : மிளகு சம்பா
இந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லை – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: சீனியர்களுக்கு ஷாக் ட்ரீட்மென்ட்… பொன்முடியோடு முடிந்து போன பின்னணி!
“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பரிசாக கொடுங்கள்” – மோடி அட்வைஸ்!