பியூட்டி டிப்ஸ்: கண்களை அழகாக்கும் மை… கண்களைப் பாதிக்கலாம்!

Published On:

| By Kavi

Eyeball tattooing Can Harm Your Eyes

கண்ணில் மை இடும் பழக்கம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண் மை இட்டுக்கொள்கின்றனர்.

முன்பு விளக்கெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் மை பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது கடைகளில் பல வகைகளிலும் வெவ்வேறு நிறங்களிலும் கண் மைகள் கிடைக்கின்றன.

அத்தகைய கண் மை. நீர் போன்றவை பட்டு அழியாமல் இருப்பதற்காகவும், கருமை நிறம் அடர்த்தியாக வருவதற்காகவும் ஈயம், செயற்கைக் கரிமம் போன்ற வேதிப் பொருட்கள் அதிகம் சேர்த்து தயாரிக்கப்படுகின்றன.

இந்த நிலையில் புதிதாகவும், புதிய பிராண்டிலும் கண் மை போடுபவர்களுக்குக் கண்களில் கட்டி ஏற்படுவது, கண் இமைகளில் ஏற்படும் எரிச்சல் ஆகிய அறிகுறிகள் தென்படும்போது என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்பது குறித்து சில அறிவுறுத்தல்களை பிரிட்டன் தேசிய சுகாதார நிறுவனம் (NHS) வழங்கியுள்ளது.

“கண்ணில் கட்டி, எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்போது, ஒரு நாளைக்கு இரண்டு முறை கண் இமைகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.

மேலும், அறிகுறிகள் குறைந்தாலும், கண்களைத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். இதற்கான அறிகுறிகள் இருக்கும்போது கண்ணில் லென்ஸ் அணிய வேண்டாம்.

அறிகுறிகள் தென்படும்போது, கண் ஒப்பனை, அதிலும் குறிப்பாக ஐலைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்த வேண்டாம்” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கான மேலும் சில அறிவுறுத்தல்களை கண் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

“முதலில் கண்களில் தூசி சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள், கண்களில் வேதிப் பொருட்கள் கொண்ட ஒப்பனை சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.

ஒருவேளை பயன்படுத்தினாலும் தேவை முடிந்தவுடன் கண் இமை, இமையிலுள்ள முடி போன்ற கண்ணின் எல்லா பகுதிகளிலும் சரியான முறையில் அவற்றை முழுமையாக அகற்றுங்கள். அதை அகற்றாமல் போனால் கண்ணில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

ஒருவர் பயன்படுத்திய ஒப்பனைப் பொருட்களை வேறொருவர் பயன்படுத்த வேண்டாம்.

சோப், ஃபேஸ்வாஷ் போன்றவை கண்ணுக்குள் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், வெறும் தண்ணீர் கொண்டே கண்ணைச் சுத்தம் செய்ய வேண்டும்.

கண்களுக்கு உள்ளே அல்லது அதைச் சுற்றி கட்டி ஏற்பட்டால் நாமக்கட்டி, சந்தனம், விளக்கெண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.

கண் சிவப்பாகவோ அல்லது அதில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ற உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: இள வயதில் முதுகுவலி.. என்ன காரணம்? தீர்வு உண்டா?

காலையில ஏர் ஷோ, நைட் பீர் ஷோ – அப்டேட் குமாரு

விமான நிகழ்ச்சி: பாதுகாப்பு குளறுபடியால் மக்கள் உயிரிழப்பு… எடப்பாடி கண்டனம்!

பியூட்டி டிப்ஸ்: டிரெண்டாகும் ரோஸ்மேரி வாட்டர்: கூந்தல் வளர்ச்சிக்கு உதவுமா?

ஹெல்த் டிப்ஸ்: கர்ப்பப்பையை நீக்கினால் தாம்பத்ய உறவு பாதிக்குமா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel