இரட்டை குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளில் ஒன்று நயன் – விக்கி ஜோடி.
கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக இருவருக்கும் திருமணம் நடந்தது. திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில்,
அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறந்திருப்பதாக விக்னேஷ் சிவன் நேற்று (அக்டோபர் 9) அறிவித்தார். இது ஆச்சரியங்களையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது.
திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனவர்களும், குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியாது என்று மருத்துவர்களால் சான்றிதழ் பெற்றவர்களும்,
கணவர் அல்லது மனைவி இருவரில் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தாலும் தான் வாடகைத்தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்த சட்டவிதிகளை நயன்தாரா – விக்னேஷ் சிவன் மீறியதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் இந்த விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், வாடகைத் தாய் என்பது விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டதா, விதிமுறைகளை மீறியதா என்பது விவாதத்திற்குரிய ஒன்று தான்.
ஏற்கனவே கருமுட்டை தானம் தொடர்பான பல பிரச்சினைகள் இருந்து வருகிறது.
ஆனால் 21 வயதிற்கு மேலானவர்கள் 36 வயதிற்கு உள்ளானவர்கள் பெற்றோர் மற்றும் கணவரின் அனுமதியுடன் கருமுட்டை தானம் வழங்க சட்டத்தில் இடம் உள்ளது.
அந்த வகையிலும் இது சாத்தியமாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வாடகைத் தாய் பெற்றுக் கொள்ளும் விதிமுறைகளை பின்பற்றி தான் இருவரும் குழந்தைப் பெற்றுக் கொண்டனரா என்பது குறித்து மருத்துவ சேவைகள் இயக்குனர் மூலம் விளக்கம் கேட்கப்படும் என்று தெரிவித்தார்.
கலை.ரா
ஃபிலிம்பேரில் விருதுகளை அள்ளிய சூர்யா படங்கள்!
சட்டத்தை மீறினார்களா நயன் விக்கி தம்பதி ?