இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் மெரினா கடற்கரையில் இன்று (அக்டோபர் 6) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், முப்படைகளின் தளபதி அனில் சவுரா ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
வானில் எம்.ஐ 17, ஹார்வர்ட், டகோட்டா, ரஃபேல், தேஜஸ், சுகோய், சூர்ய கிரண், ஹாக் உள்ளிட்ட இந்திய விமானப்படையின் விமானங்கள் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் பாண்டியா, சோழா, பல்லவா, நட்ராஜ், காவேரி, கலாம், புயல், நீலகிரி என பல்வேறு பெயர்களில் விமானங்கள் வானில் அணிவகுத்து சாகசம் நடத்தின.
விமரிசையாக நடந்து முடிந்துள்ள இந்திய விமானப் படையின் வான சாகச நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இதோ…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மெரினாவில் களைகட்டும் விமான சாகச நிகழ்ச்சி… சிலிர்ப்பூட்டும் விமானங்கள் : ஒரு பார்வை!
Comments are closed.