பியூட்டி டிப்ஸ்: உடல்நலக் குறைவுக்குப் பிறகு அதிகமான முடி உதிர்வு… தீர்வு என்ன?

டிரெண்டிங்

உடல்நலக் குறைவுக்குப் பிறகு சிலருக்கு அதிக அளவில் முடிகள் உதிரும். உதாரணத்துக்கு… டைபாய்டு, கொரோனா, டெங்கு காய்ச்சலாகவோ, சமீபத்தில் நடந்த அறுவை சிகிச்சையாகவோ, பிரசவமாகவோ எப்படியும் இருக்கலாம்.

அது நிஜமான முடி உதிர்வு பிரச்சினையே அல்ல. தினசரி வாழ்க்கையில் நாம் எல்லோருமே குறிப்பிட்ட எண்ணிக்கையில் முடி உதிர்வை எதிர்கொள்வோம். அதுதான் இயற்கை. ஆனால் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் உடல்நலக் குறைவு ஏற்படும் தருணங்களில் அப்படி முடி உதிராது. அந்த நாள்களைக் கடந்த பிறகு அப்போது உதிர்ந்திருக்க வேண்டிய முடிகள் எல்லாம் சேர்ந்து உதிரத் தொடங்கும். அதனால் வழக்கத்தைவிட அதிக முடி உதிர்வு இருப்பதாக உணர்வோம்.

இந்தப் பிரச்சினையை ‘டெலோஜென் எஃப்ளுவியம்’ என்கிறார்கள் இன்டர்னல் மெடிசின் எக்ஸ்பெர்ட்ஸ். “இது சிலருக்கு ஆறு மாதங்கள் வரையிலும், சிலருக்கு அதைத் தாண்டியும் இருக்கும். பெரும்பாலானவர்களுக்கு 3 முதல் 6 மாதங்களில் இது நின்றுவிடும். எனவே இது குறித்துப் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. முடி உதிர்கிறதே என்பதற்கும் சேர்த்துக் கவலைப்பட்டால் அந்த ஸ்ட்ரெஸ்ஸும் சேர்ந்து முடி உதிர்வை இன்னும் அதிகப்படுத்தும்.

முடி உதிர்வைத் தடுக்க ஆரோக்கியமான, சரிவிகித உணவுப்பழக்கம் முக்கியம். நிறைய காய்கறிகள், கீரைகள், பழங்கள், முழுத்தானியங்கள் போன்றவற்றை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். கூந்தலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் புரதச்சத்து மிக முக்கியம்.

வைட்டமின் ஏ, பி, சி, டி மற்றும் இ போன்றவை அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, துத்தநாகம் மற்றும் செலினியம் சத்துகளும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு அவசியம். எனவே இவையெல்லாம் உள்ளபடி உங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று முடி உதிர்வை நிறுத்துவதற்கான தீர்வைச் சொல்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: வாழைப்பழம்- வேர்க்கடலை மில்க்‌ஷேக்

மாசக் கடைசி பரிதாபங்கள்: அப்டேட் குமாரு

அந்திமழை நிறுவனர் இளங்கோவன் காலமானார்… தலைவர்கள் இரங்கல்!

எடப்பாடி, வேலுமணி மகன்களுக்கு புதிய பொறுப்பு? அதிமுகவில் சலசலப்பு!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *