பாம்பைப் பார்த்து பயந்தால் அது அறிவார்ந்த செயல்தான். ஆனால், பாம்பு இல்லாத இடத்தில் அதுபற்றி கற்பனை செய்துகொண்டு பயப்படுவது ஆரோக்கியமான மனநிலை அல்ல. உடல்நலன் மீது அக்கறையுடன் இருப்பது நல்லதுதான். ஆனால், அதில் அளவு தாண்டக் கூடாது.
காலையில் அதிகம் சாப்பிட்டுவிட்டோம், இன்று ஜிம்முக்கு போகவில்லை, வயிற்றில் வலிப்பது போல் தோன்றுகிறது என்கிற சிந்தனைச் சுழலில் சிக்கிக் கொள்ளக் கூடாது.
இவை தவிர வேறு ஏதேனும் நோய் இருக்குமோ என்று சந்தேகப்படுவது, தனக்கு அறிகுறிகள் இருப்பதாக சந்தேகப்படுவது, இணையதளத்தில் அதுபற்றி தகவல்களைத் தேடுவது எனவும் இருக்கக் கூடாது.
இப்படிப்பட்டவர்கள் பொருளாதார ரீதியில் நிறைய இழப்புகளைச் சந்திப்பார்கள். அடிக்கடி மருத்துவரைப் பார்ப்பது அல்லது பரிசோதனைகள் செய்வது போன்ற செலவுகளில் பணத்தை இழப்பார்கள்.
சிலர் அறுவை சிகிச்சை செய்துகொள்கிற அளவுக்கும் போய்விடுவார்கள். வேலையில், தொழிலில் கவனம் செலுத்த முடியாது. எதையும் சாதிக்கவும் முடியாது. வேலையில் உற்பத்தி திறன் இருக்காது. குடும்பரீதியாகவும், வெளியில் உறவுரீதியாகவும் நடைமுறை சார்ந்த நிறைய சிக்கல்களைச் சந்திப்பார்கள்.
முக்கியமாக இவர்கள் உடல்நலம் சார்ந்தே பேசிக் கொண்டிருப்பார்கள். எந்த வகையில் பேச்சை மாற்றினாலும், இறுதியில் நோய், ஆரோக்கியம் என்று கடைசியாக அங்கு வந்து நிற்பார்கள். உணவு உள்ளிட்ட விஷயங்களில் சுற்றியுள்ள சூழ்நிலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
உங்களுக்கு நோயில்லை என்று எந்த டாக்டர் சொன்னாலும் நம்ப மாட்டார்கள். இவர்கள் விரும்புவதை டாக்டர் சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள்.
இல்லாவிட்டால் மருத்துவரை மாற்றி புதிதாக ஒரு மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்வார்கள். உடற்பயிற்சி செய்யும்போது கொஞ்சம் வேகமாக இதயம் துடித்தாலே பதற்றம் வந்துவிடும். உடனே ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்பார்கள்.
இந்த நிலையில் உடல் ஆரோக்கியத்துக்காக நம்மால் என்ன செய்ய முடியுமோ அவற்றில் மட்டுமே நாம் கவனம் செலுத்த வேண்டும்.
சத்தான உணவுகளைச் சாப்பிடுவது, போதுமான நேரம் தூங்குவது, உடற்பயிற்சிகள் செய்வது என இதையெல்லாம்தான் நம்மால் செய்ய முடியும்.
வருடம் ஒருமுறை முழு உடல்பரிசோதனை செய்துகொள்ள முடியும். இவையெல்லாம்தான் நம்மால் செய்ய முடிகிற விஷயங்கள்.
ஆனால், நம்மால் முடியாத, நம் கட்டுப்பாட்டைத் தாண்டிய விஷயங்களை நாம் விரும்பியபடி மாற்ற முயற்சி செய்யும்போதுதான் பதற்றமும், மன அழுத்தமும் வருகின்றன.
எந்த அறிகுறிகள் எப்போது நம் தினசரி வாழ்க்கையை பாதிக்கின்றனவோ, ஆரோக்கியத்தை பாதிக்கின்றனவோ அப்போது மருத்துவரைத் தேடிச் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம்.
சுய பரிசோதனையோ, சுய சிகிச்சையோ செய்துகொள்ளக் கூடாது’’ என்று எச்சரிக்கிறார்கள் உளவியல் ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
‘தி கோட்’ – மோகன் ரீ இன்னிங்ஸ் ஆக அமையுமா ?
சம்பளத்த காணோம் ’ஜி’ : அப்டேட் குமாரு
மக்களவை தேர்தல்… சென்னையில் நடுத்தர மக்கள் அதிகளவில் ஆதரவு: உதயநிதி பேச்சு!
பாலியல் புகார்… நிவின் பாலி மீது வழக்கு!