இன்றைய சூழ்நிலையில், சுமார் 48 சதவிகிதம் பேர் தங்களுக்கு வயதாகிவிட்டது, இனி… அழகாக இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்னவென்று விளையாடுவதோ, உடற்பயிற்சிகள் செய்வதோ வேண்டாம் என தவிர்க்கிறார்கள். இதனால் வாழ்க்கை முறை சார்ந்த நோய்கள் அதிகமாகி வருகின்றன. அழகும் ஆரோக்கியமும் குறைந்துவிடுகிறது. இதற்கெல்லாம் தீர்வு உடற்பயிற்சிகள்தான். உடல், மன ஆரோக்கியத்தைப் பராமரித்தால் அழகாக வலம் வரலாம். அதற்கான அன்றாட ஆலோசனைகள் இதோ…
லிஃப்ட், எஸ்கலேட்டர் போன்றவை நம் வசதிக்காக இருந்தாலும் முடிந்தவரை படிகளைப் பயன்படுத்துங்கள். படிகளில் ஏறி, இறங்குவதே சிறந்த உடற்பயிற்சிதான்.
பைக், கார் போன்ற வாகனங்களைப் பயன்படுத்தினாலும் நீங்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சற்று முன்பாகவே நிறுத்துங்கள். இதன்மூலம் நீங்கள் நடந்து செல்வதற்கான வாய்ப்பு உருவாகும்.
நடைப்பயிற்சியைத் தாரக மந்திரமாக வைத்திருங்கள். எப்போது நேரம் கிடைத்தாலும் நடக்க வேண்டும் என்ற கொள்கையைச் செயல்படுத்துங்கள். அது அலுவல் நேரத்துக்கிடையில் கூட சின்ன நடைப்பயிற்சி உங்கள் மன அழுத்தத்தைப் போக்கி, மீண்டும் உற்சாகமாக உங்கள் பணிகளில் ஈடுபட உதவும்.
ஜிம்முக்கு போய் வெயிட்டை தூக்க வேண்டும் என்று மட்டும் அவசியம் இல்லை. நடனம் ஆடுவது, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது, மலைகளில் ஏறுவது, டென்னிஸ் மற்றும் பேஸ்கட் பால் போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது போன்ற உங்களுக்குப் பிடித்த நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.
இதெல்லாம் மன அழுத்தத்தைக் குறைத்து, என்றும் நீங்கள் இளமையாகவும் அழகாகவும் இருக்க உதவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : காஷ்மீரில் மோடி பேரணி முதல் கங்குவா அப்டேட் வரை!
கிச்சன் கீர்த்தனா : குழம்பு வடகம்
ஏலியன் மாதா கி ஜே… அப்டேட் குமாரு