போனஸ் தொகையால் அதிர்ச்சியில் உறைந்த ’எவர்கிரீன்’ ஊழியர்கள்!

டிரெண்டிங்

தைவானைச் சேர்ந்த கப்பல் போக்குவரத்து நிறுவனம் தான் எவர்கிரீன். கடந்த 2021ம் ஆண்டு அதன் பிரம்மாண்ட சரக்கு கப்பல் ஒன்று சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டபோது உலகம் முழுவதும் தலைப்பு செய்தியானது.

சுமார் 6 நாட்கள் அங்கு சிக்கிக்கொண்ட கப்பலால் அந்நிறுவனம் சுமார் 550 மில்லியன் அமெரிக்க டாலரை சூயஸ் கால்வாய் நிறுவனத்திற்கு அபராதமாக செலுத்தியது.

இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து 2 வருடம் கழித்து தற்போது நிறுவனத்தின் லாபத்திற்காக உழைத்த 3100 தொழிலாளர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் போனஸ் வழங்கியுள்ளது.

போனஸ் வழங்குவது ஒரு சாதாரண செய்தி தானே என்று எல்லோருக்கும் கேள்வி வரும். ஆனால் எவர்க்ரீன் நிறுவனம் கொடுத்துள்ள போனைஸக் கேட்டால் கேட்ட நேரத்தில் அனைவருக்கும் நிச்சயம் தலை சுற்றும்.

பிரபல இணையதளமான ப்ளூம்பெர்க் நிறுவனம் அளித்த தகவலின்படி, தைவான் கப்பல் போக்குவரத்து நிறுவனமான எவர்கிரீன் தேர்ந்தெடுக்கப்பட்ட 3100 ஊழியர்களுக்கு போனஸாக 60 மாத சம்பளத்தை வழங்கி உள்ளது. அதாவது ஒரே தவணையில் 5 வருட சம்பளத்தை போனஸாக வழங்கியுள்ளது எவர்கீரின்.

எவர்கீரின் தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு ஊழியரின் ஆண்டு சம்பளமாக சுமார் 44,745 முதல் 1,71,154 அமெரிக்க டாலர் வரை வழங்குவதாக ப்ளூம்பெர்க் இணையதளம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு ஊழியர் இந்திய மதிப்பில் ஆண்டுக்கு சுமார் ரூ.37 லட்சம் முதல் 1.41 கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார்.

இதன்மூலம் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இந்திய மதிப்பில் போனஸாக ரூ.1.90 கோடி முதல் ரூ.7.10 கோடி வரை பெற்றிருப்பார்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

மேலும் தனது நிறுவனத்தில் பணிபுரியும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கு அவர்களது வாழ்வில் எதிர்பார்க்காத ஊதிய உயர்வினையும் வழங்க உள்ளது எவர்கிரீன்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வெளியிட்ட செய்தியின்படி, 2022ஆம் ஆண்டு முடிவடையும் நிதியாண்டில் 16.25 பில்லியன் அமெரிக்க டாலர் ஈட்டிய பிறகு, எவர்கிரீன் 39.82 சதவீதத்தை தனது லாபமாக பதிவு செய்துள்ளது.

இதற்கு முக்கிய காரணமாக கொரோனா பெருந்தொற்று அமைந்து விட்டது. மேலும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களால் நுகர்வோர் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததே பெரும் லாபத்திற்கு காரணம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

உயரும் பலி எண்ணிக்கை: பட்டாசு ஆலை உரிமையாளர் கைது!

தயாரிப்பாளர் சங்க தேர்தல் தேதி அறிவிப்பு: முழு விவரம்

+1
0
+1
0
+1
0
+1
6
+1
1
+1
0
+1
0

1 thought on “போனஸ் தொகையால் அதிர்ச்சியில் உறைந்த ’எவர்கிரீன்’ ஊழியர்கள்!

  1. Freight Container charges increased without valid reasons past 2 years. these comapnies earning 200% profit. due to this all commodity prices are increased. should not encourage this kind of companies.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *