ஒரு திரைப்படம் பார்க்கிறோம் என்றால் நல்ல சவுண்ட் எபெக்டில் பார்க்கவே அனைவரும் விரும்புவோம். சாதாரண ஆடியோவைகூட அரங்கமே அதிரும் அளவிற்கு வழங்கவல்லது ஸ்பீக்கர்கள். அப்படி ஒரு தரமான ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது லாஜிடெக் நிறுவனம்.
முற்றிலுமாக மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட ஸ்பீக்கர்களை கம்பியூட்டர் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான லாஜிடெக் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
55 மீட்டர் சுற்றளவு வரை புளூடூத் இணைப்பு செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டள்ள இந்த ஸ்பீக்கரில் ஆன்ராய்டு 8 இயங்கு தளம் உள்ளது.
சார்ஜ் அளவையும், பேட்டரியின் மின் திறனை காட்டும் இண்டிகேட்டர் வசதி வழங்கப்பட்டுள்ளது.
தண்ணீர் மற்றும் தூசி புகாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள எபிக்பூம் ஸ்பீக்கரை சுலபமாக பயணத்தின் போதும் எடுத்து செல்லலாம்.
வாட்ஸ் அப்பில் மின்னம்பலம் செய்திகளை படிக்க… இங்கே க்ளிக் செய்யவும்!
360 டிகிரி கோணத்திற்கு அறை முழுவதும் ஒலியை பரப்பும் தன்மை கொண்டது. அதற்கேற்றவாறு எபிக்பூம் ஸ்பீக்கரின் உடலானது வடிவமைக்கப்பட்டுள்ளது.
லாஜிடெக்-ன் எபிக்பூம் ஸ்பீக்கரில் இடம்பெற்றுள்ள மேலும் சில அம்சங்களை பார்க்கலாம்
டைமன்ஷன்: 6.3 இன்ச்(L), 4.6 இன்ச்(W), 9.4 இன்ச்(H)
எடை: 1979 கிராம்
360 டிகிரி ஒலி: அதிகபட்சமாக 94 dBC(normal), 95 dBC(outdoor)
180ft (55 mm) ரேன்ஜ் வரை ஒலியை பரப்பவல்லது.
ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களை கனெக்ட் செய்ய முடியும்.
17 மணி நேரம் வரை செயல்படும் திறன்
புளூடூத் வழியாக மொபைல், லேப்டாப், கம்பியூட்டர் என அனைத்திலும் இணைத்து பயன்படுத்தலாம்.
இது கருப்பு, வெள்ளை, மஞ்சள், நிறங்களில் கிடைக்கிறது. இதன்விலை சுமார் ரூ.30,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
-பவித்ரா பலராமன்
இலங்கை பிரதமரை சந்தித்த பிரபுதேவா : என்ன காரணம் ?
செந்தில் பாலாஜி வழக்கு: மத்திய குற்றப் பிரிவு போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல்!
the best speaker “BOSE”