இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு குழு, சிறுவனைக் கயிறு போல் பயன்படுத்தி ஸ்கிப்பிங்க் செய்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
கின்னஸ் உலக சாதனை என்பது பல வித்தியாசமான நிகழ்வுகளை மற்றும் திறமைகளை அங்கீகரித்து அதற்கான சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு குழு ஸ்கிப்பிங்க் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளனர்.
ஸ்கிப்பிங்க் என்றால் நமக்குத் தெரிந்ததெல்லாம் கயிறு கொண்டு குதித்து விளையாடுவது தானே. இதில் என்ன உலக சாதனை என்று பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டிருக்கும்.
ஆனால் இவர்கள் ஸ்கிப்பிங்க் செய்தது கயிற்றைப் பயன்படுத்தி அல்ல. ஒரு சிறுவனை கயிறாகப் பயன்படுத்தி ஸ்கிப்பிங்க் செய்தனர்.
4 பேர் கொண்ட இந்த குழுவில் ஒரு சிறுவனைக் கயிறாக மாற்றியுள்ளனர். அந்த சிறுவனை இரண்டு பேர் எதிரெதிர் நின்று ஒருவர் கைகளையும் மற்றொருவர் கால்களையும் பிடித்துக் கொண்டனர்.
பின்னர் அந்த சிறுவனை ஸ்கிப்பிங்க் கயிறு போல் சுழற்றுகின்றனர். அந்த சமயம் குழுவில் உள்ள 4-வது நபர் குதித்து விளையாடுகிறார்.
இவ்வாறு அவர்கள் ஒரு நிமிடத்தில் 57 முறை ஸ்கிப்பிங் செய்துள்ளனர்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த குழுவோடு மற்றொரு குழுவும் போட்டியிட்டுள்ளது. இதில் 57 முறை ஸ்கிப்பிங் செய்த இங்கிலாந்து குழு வெற்றி பெற்று உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இந்த போட்டியானது கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் நடைபெற்றுள்ளது. இதனை கின்னஸ் உலக சாதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்டுள்ளது.
இதனைக் கண்ட பலரும், “இந்த போட்டியில் கலந்து கொண்டவர்களின் மருத்துவ விவரங்கள் மற்றும் உடல்நிலை எப்படி இருக்கிறது” என்றும் “இது என்ன விதமான சாதனை, இப்படிப்பட்ட மனிதாபிமானமற்ற செயலுக்கு கின்னஸ் எவ்வாறு ஒப்புக் கொண்டது” என்று தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
மோனிஷா
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு; காய்கறி விலை சரிவு!
36 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்!