எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்ட வைரல் வீடியோ!

Published On:

| By Jegadeesh

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அது போல் தற்போது எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள ‘சாண்டா விமானம்” கிராஃபிக்ஸ் வீடியோ வைரலாக பரவிவருகிறது.

இந்த வீடியோ ஒரே நாளில் மில்லியன் கணக்கான பார்வையாளர்களையும் 4 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களையும் பெற்றுள்ளது.

உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25 ) கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளை கவரும் விதமாக ஒரு வீடியோவை தங்களுடைய அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று (டிசம்பர் 24 ) வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் ‘ பனி பொழிந்துள்ள விமான ஓடுபாதையில் இருந்து சாண்டா கிளாஸ் தொப்பி மாட்டப்பட்ட விமானத்தை களைமான்கள் இழுத்து கொண்டு வானில் பறப்பது போல் அழகான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

“கேப்டன் க்ளாஸ்” என்ற தலைப்பில் வெளியாகி உள்ள அந்த வீடியோவில் எமிரேட்ஸில் இருந்து கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போது இந்த வீடியோவிற்கு பல்வேறு கருத்துக்களை நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பார்ப்பதற்கு அழகாக உள்ளது. ஆனால் இது உண்மையில் சாத்தியமில்லை என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.மேலும், ஒருவர் இது விலங்குகளை துன்புறுத்தும் மன நிலையில் ஏர்லைன் நிறுவனம் இருப்பதை தெளிவுபடுத்துகிறது என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு!

கடும் குளிரில் நடைபயணம்: அதிரவைத்த ராகுல் பதில்!