அதிக கடன் இருப்பதால் ட்விட்டர் நிறுவனம் திவால் ஆவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ட்விட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 27-ஆம் தேதி எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார்.
கடந்த வாரம் எலான் மஸ்க் அதிரடியாக ஆட்குறைப்பு பணியில் இறங்கினார். ட்விட்டரில் பணிபுரிந்த 50 சதவிகித ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார்.
இந்தநிலையில், நேற்று (நவம்பர் 10) எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவன அதிகாரிகளை சந்தித்து பேசினார். ஊழியர்களிடம் அவர் பேசும்போது,
“ட்விட்டர் நிறுவனம் 13 பில்லியன் டாலர் கடனில் இருக்கிறது. அடுத்த 12 மாதங்களில் 1.2 பில்லியன் டாலர் வட்டி செலுத்த வேண்டும்.
ஒரு நாளைக்கு 4 மில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்ந்து நேரிட்டால் ட்விட்டர் நிறுவனம் திவால் நிலைக்கு செல்லும்.
ட்விட்டரில் பணியாற்றும் ஊழியர்கள் வாரத்திற்கு 80 மணி நேரம் வேலை செய்ய வேண்டும்.
இலவச உணவு வழங்குவது உள்ளிட்ட சலுகைகள் குறைக்கப்படும். கோவிட் தொற்று நீங்கிவிட்டதால், ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியாது.
கண்டிப்பாக அனைவரும் அலுவலகத்திற்கு வந்து வேலை செய்ய வேண்டும். நாம் அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும்.
நீங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் ராஜினாமா செய்து கொள்ளுங்கள்” என்றார்.
இந்தநிலையில், ட்விட்டரின் தலைமை பாதுகாப்பு அதிகாரி லியா கிஸ்னர், தலைமை தனியுரிமை அதிகாரி டேமியன் கீரன் மற்றும் தலைமை இணக்க அதிகாரி மரியன்னே ஃபோகார்டி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.
டிவிட்டரில் பணிபுரிந்த மூத்த நிர்வாகிகள் அடுத்தடுத்து பதவி விலகி வருகின்றனர்.
செல்வம்
முடிதிருத்தும் தொழிலாளியாக ஆர்.ஜே.பாலாஜி
சென்னை – மைசூரு வந்தே பாரத் ரயில் சேவை துவக்கம்!